அர்ப்பணிப்புமாதிரி

அர்ப்பணிப்பு

3 ல் 1 நாள்

உறவில் அர்ப்பணிப்பு

தேவனுடைய அன்பைப் பிரதிபலித்தல்

வாழ்க்கையில் மிக முக்கியமான அர்ப்பணிப்புகளில் ஒன்று, நம் உறவுகளுடன்

கொண்டிருக்கும் அசையாத அர்ப்பணிப்பாகும். அது நம் பரிசுத்த விவாகமாகவோ,

விலையேறப்பெற்ற குடும்பப் பிணைப்பாகவோ, நெருங்கிய உறவுகளிடம் பெரிதும்

மதிக்கும் உறவாகவோ அல்லது கிறிஸ்துவின் சரீரத்தில் மற்ற அவயவங்களுடன்

இணைந்திருப்பதாகவோ இருக்கலாம்; இந்த உறவுகளைப் பேணி காப்பதற்கான

நம்முடைய உறுதியான அர்ப்பணிப்பு தேவனுடைய அளவற்ற அன்பையும், அசையாத

உண்மைத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

நம் திருமண வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து, திருமண உறவில் மகிழ்வதும்,

சபையின் மீது கிறிஸ்து கொண்டிருக்கும் தியாகம் நிறைந்த அன்பைப் போன்ற

சுயநலமற்ற அன்புடன் வாழ்க்கைத்துணையை கனம் பண்ணி மதிப்பதும் முக்கியம்

என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும், அசையாத அர்ப்பணிப்புடன் நம் குடும்பங்களைப் போஷித்து பராமரிப்பதன்

அவசியத்தை 1 தீமோத்தேயு 5:8 அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது.

நண்பர்களிடம் அசையாத பற்றுறுதியாகவும், ஆதரவாகவும் இருப்பதும், பரிதாப

உணர்வுடனும் மனதுருக்கத்துடனும் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து,

ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, பக்திவிருத்தி உண்டாக உதவுவதன்

முக்கியத்துவத்தை வேதாகமம் வலியுறுத்துகிறது.

எல்லா நேரங்களிலும் சிநேகிக்கும் நண்பனையும், இடுக்கணில் உதவவே

பிறந்திருக்கும் சகோதரனையும் பற்றி பேசும் நீதிமொழிகள், உறுதியான நட்புறவின்

முக்கியத்துவத்தை தெளிவாகக் காண்பிக்கிறது.

நாம் ஒருவரையொருவர் நேசிக்கவும், நம்மை விட மற்றவரை கனமாகக் கருதவும்

அர்ப்பணிக்கும்படி அழைக்கப்படுகிறோம்.

நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்போது, கிறிஸ்துவின் பிரமாணத்தை

நிறைவேற்றுகிறவர்களாக இருப்போம்.

இயேசுவின் சீஷர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற அன்பைப்

பிரதிபலிக்கும் உண்மையும், உத்தமமுமான உறவுகளை வளர்க்க

அழைக்கப்படுகிறோம்.

யோவான் 17:20-ல், நாம் அன்புடன் ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்கும் இந்த

உலகம் கிறிஸ்துவின் செய்தியை விசுவாசிக்கும் என்ற எண்ணத்தில் இயேசு, தாமும்

பிதாவும் ஒன்றாக இருப்பது போல தம் சீஷர்களும் ஒற்றுமையாக இருக்க

வேண்டுமென்று ஜெபித்தார்.

நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக இருந்தோமென்றால், கிறிஸ்துவுக்காக இந்த

உலகத்தையே ஆதாயப்படுத்திவிடலாம்.

நம்முடைய உறவுகளுக்குள் அன்புகூரவும், ஒற்றுமையாக இருக்கவும்

அர்ப்பணிக்கும்போது, அதுவே இயேசுவின் ஆழமான அன்பிற்கு சாட்சியாக

அமைந்து, மற்றவர்களும் அவருடைய அன்பையும் கிருபையையும் அனுபவிப்பதற்கு

அவர்களை இழுத்துக்கொள்ள உதவும்.

பின்வரும் வசனத்தை சத்தமாக வாசித்து முடிப்போம்,

20. “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய

வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை

உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல

அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.”

அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள், கனத்தை தழுவிக் கொள்ளுங்கள், ஒற்றுமையைப்

பற்றிக்கொள்ளுங்கள், அப்போது இந்த உலகம் அறிய வேண்டியதை அறியும் ...

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

அர்ப்பணிப்பு

“ஒரு காரணத்திற்காக, ஒரு செயலுக்காக அல்லது ஒரு உறவிற்காக நம்மையே ஒப்புவிக்கும் நிலை அல்லது தன்மை” என்பது அர்ப்பணிப்பின் அகராதி அர்த்தம். கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அர்ப்பணிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது, அது தேவனோடுள்ள நம் வாழ்க்கையை விடாமுயற்சியுடனும், பொறுமையுடனும், செழிப்புடனும் வாழ உந்துதலாக இருக்கிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/