இனியும் பயத்தில் வாழவேண்டாம் மாதிரி
பயம் உன் வாழ்க்கையை ஆட்கொள்ள விடாதே!
இன்றும் அடுத்த சில நாட்களுக்கும், பயத்தைப் பற்றிய சில காரியங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பயம் ஒரு மோசமான ஆலோசகர். பயம் உன்னை முடக்கிவிடும். பயம் யதார்த்தத்தை சிதைக்கிறது. உன் எல்லா பயங்களையும் நீ மேற்கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்! ஆகவேதான் “பயப்படாதே” என்று இயேசு சொன்னார்.
பயம் என்றால் என்ன? இதனை "அப்போதைய சூழலால் உண்டாகிற அல்லது உண்மையான அல்லது கற்பனையான ஆபத்தைக் குறித்த எண்ணத்தால் ஏற்படுகிற துக்க உணர்வு" என்று வரையறுக்கலாம்.
எனது கேள்வி இதுதான்: உன் வாழ்க்கையில் பயம் மேலோங்கினால் என்ன நடக்கும்? பயம், திகில் அல்லது பீதி போன்ற உணர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது, அது உன்னை சாதாரணமாக செயல்படவிடாமல் தடுக்கிறதா? பயத்தின் மூன்று விளைவுகளை இங்கே கொடுத்துள்ளேன்:
- பயம் முடக்குகிறது.
- பயம் சந்தேகத்தை வளர்க்கிறது.
- பயம் உனக்குள் இருக்கும் ஆண்டவருடைய திட்டங்களை அழிக்கிறது.
பயம் என்பது உன் கிறிஸ்தவ வாழ்க்கையில் உன்னை ஒடுக்கவும் தடுக்கவும் சாத்தானால் பயன்படுத்தப்படும் முதன்மையான ஆயுதமேயன்றி வேறல்ல. ஆனால் இயேசு பயம் என்னும் இந்த எதிரியைத் தோற்கடித்தார்! (கொலோசெயர் 2:15) தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (2 தீமோத்தேயு 1:7)
அன்பும் பலமும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவி ஆண்டவரால் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது! ஏதோ பிரத்தியேகமான தெய்வீகத்தால் அல்ல. சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரால், வெற்றி சிறந்தவராக திரும்பி வருகிறவரான ஆண்டவரால் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது!
நிச்சயமாக, ஆண்டவருடைய பரிபூரண அன்பு வெற்றிசிறந்து, உன் இதயத்திலுள்ள பயத்தை புறம்பே அகற்றும். உன் மீதுள்ள அவரது அன்பு சகல பயத்தை அழிக்கிறது. 1 யோவான் 4:18ல் காணப்படும் இந்த நித்திய சத்தியத்தை அறிக்கையிடு: “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல."
இன்றே இதை நீ பெற்றுக்கொள். ஆண்டவருடைய வார்த்தை உன் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறது. தேவனுடைய ஆவி உன்னை ஊக்குவித்து தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல உதவுகிறது. மதிலைத் தாண்டிச் செல்லவும், மலைகளை உடைக்கவும் அவர் உனக்கு உதவுகிறார். அவருடைய பலத்தின் மூலம், நீ வல்லமையான காரியங்களைச் செய்வாய்! (சங்கீதம் 18:29 மற்றும் 2 சாமுவேல் 22:30)
நாம் சேர்ந்து ஜெபிப்போம்... “ஆண்டவரே, நீரே என் ஆண்டவரும் என் இரட்சகருமாய் இருக்கிறீர் என்பதை என் வாயினால் அறிக்கையிடுகிறேன். உமது வார்த்தையில் நீர் சொல்லியிருக்கிற யாவும் உண்மை என்று நான் அறிக்கையிடுகிறேன்! எனக்கு பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவி உம்மால் கொடுக்கப்பட்டுள்ளது! நான் உம்மிடமிருந்து இந்த ஆவியைப் பெறுகிறேன். பயத்தை என் வாழ்க்கையில் கொண்டு வந்த சகல அதிகாரமும் இப்போது பறிக்கப்பட்டு, உமது நாமத்தால் அதன் பெலன் அற்றுப்போனது என்று நான் அறிக்கையிடுகிறேன்; ஏனென்றால் நான் என் முழு வாழ்க்கையையும், என் உணர்ச்சிகளையும், என் சூழ்நிலைகளையும், இன்னும் மற்ற எல்லாவற்றையும் உமக்குத் தருகிறேன்! நான் உமது நாமத்தை மகிமைப்படுத்துகிறேன்; இந்தப் பயத்தை வெல்ல நீர் எனக்குக் கொடுத்த விடுதலைக்கு நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”
இந்தத் திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்
இந்த திட்டத்தைப் பற்றி
பயம் மற்றும் பதட்டத்தை கையாள்வது உனக்கு கடினமாக இருக்கலாம். பயத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது மற்றும் உன் பயத்தை நீ எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக காணலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=fear