நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

7 ல் 1 நாள்

அதிக கீழ்ப்படிதல்

பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். (மத்தேயு 2:12)

கிறிஸ்துமஸ் நெருங்கும்போது, எங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். அப்பா ஒரு பழைய பெட்டியை எடுத்து, அதிலிருந்த களிமண் உருவ பொம்மைகளை கவனமாய் வெளியே எடுப்பார். பின்னர் எங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு இயேசுவின் பிறப்பு காட்சியை அதில் உருவாக்குவோம். சரித்திரப்பூர்வமாய் சாஸ்திரிகள் தாமதமாய் வந்தனர் என்றாலும், அவர்களில்லாமல் அந்த அலங்காரம் நிறைவடையாது. அவர்களில்லாமல் கிறிஸ்மல் கதையும் இல்லை.

சாஸ்திரிகள் அனைவரும் எருசலேமை வந்தடைந்தனர். அவர்களுக்கு வழி தெரியவில்லை. அவர்களின் தேடல் அவர்களை ஏரோது ராஜாவிடம் அழைத்துச் சென்றது. மேசியாவைக் கண்டுபிடிக்கும் அவர்களின் தேடலைப் பற்றி கேள்விப்பட்ட ஏரோது தந்திரமாக குழந்தையின் இருப்பிடத்தை கண்டுபிடித்தவுடன், அதை தனக்கு தெரிவிக்குமாறு அவர்களிடம் ஒப்பந்தம் பேசுகிறான். ஆனால் சாஸ்திரிகள் தங்கள் சொந்த ஞானத்தை விட தேவனுடைய வழிகாட்டுதலைச் சார்ந்திருந்தனர். எனவே அவர்கள் ராஜாவிடம் திரும்பிச் செல்வதற்குப் பதிலாக வேறு வழியில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். கோபமடைந்த ஏரோது, இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டான். இது தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவும் இருந்தது. சாஸ்திரிகள் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்ததால் எந்த தீங்கும் நேரிடவில்லை.

நமது வரலாறு முழுவதும், மக்கள் சில சந்தர்ப்பங்களில் தங்கள் உயிரை இழக்குமளவிற்கு சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருந்தது. சாஸ்திரிகள் ஏரோதுவின் கட்டளைக்கு கீழ்ப்படியாததினால் திரும்ப வரவில்லை. நாமும் சில சமயங்களில் மனிதனை விட தேவனுக்கு அதிகமான கீழ்ப்படிதலை பிரதிபலிக்க வேண்டியிருக்கும் (அப்போஸ்தலர் 5:29). அந்த சாஸ்திரிகள் தேவனை சேவிக்கவும் அனைத்திலும் அவருக்கு கீழ்படிந்திருப்பதை தேர்வுசெய்ததைப் போலவே நாமும் நமது பள்ளிகள், பணியிடங்கள் அல்லது சமூகங்களில், ஞானமான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

தேவனுக்கு கீழ்ப்படிதல் மற்றும் கனப்படுத்துதல் என்றால் என்ன? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவனுக்காய் நின்று அவரை எவ்விதம் கணப்படுத்தக்கூடும்?

ஆண்டவரே, உமக்குக் கீழ்ப்படிந்து, உம்மை கணப்படுத்தவும், உமது குமாரனை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் என்னை பெலப்படுத்தும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/