1
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:3-4
பரிசுத்த பைபிள்
அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.
Compare
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:3-4
2
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:1
மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:1
3
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:11
தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:11
4
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:13
ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:13
5
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:6
ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:6
6
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:8
மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:8
7
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:5
நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:5
Home
Bible
Plans
Videos