மல்கியா 4

4
கர்த்தரின் நாள்
1“நிச்சயமாகவே அந்தநாள் வருகின்றது; அது சூளையைப் போல் எரியும்#4:1 அது சூளையைப் போல் எரியும் அல்லது சூளையில் எரியும் நெருப்பைப் போல் இருக்கும். அப்போது ஆணவம் கொண்ட எல்லோரும் தீமை செய்கின்ற ஒவ்வொருவரும், பயிரின் அடித்தாளைப் போல் ஆவார்கள்; வரப்போகின்ற அந்தநாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; வேரோ கிளையோ அவர்களுக்கு எஞ்சுவதில்லை என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 2ஆனால் என் பெயரில் பயபக்தியுடன் வாழ்கின்ற உங்களுக்கு, நீதியின் சூரியன் உதிக்கும். அதன் ஒளிக்கதிரின் கீழ் சுகம் இருக்கும். நீங்கள் தொழுவத்திலிருந்து கட்டவிழ்க்கப்படும் கன்றுகளைப் போல, துள்ளிக் குதித்து வெளியே செல்வீர்கள். 3நீங்கள் கொடியவர்களை மிதிப்பீர்கள்; நான் இவற்றைச் செய்யும் அந்தநாளில், அவர்கள் உங்கள் காலடிகளின் கீழ் சாம்பலாவார்கள் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
4“என் அடியவன் மோசே கொடுத்த சட்டத்தை நினைவுகூருங்கள். இஸ்ரயேலர் எல்லோருக்காகவும், ஓரேப்#4:4 ஓரேப் அல்லது சீனாய் மலையில் நான் என் அடியவன் மோசேக்குக் கொடுத்த விதிமுறைகளையும் சட்டங்களையும் நினைவிற்கொள்ளுங்கள்.
5“இதோ பாருங்கள், கர்த்தரின் பெரியதும் திகிலூட்டுகிறதுமான நாள் வருவதற்கு முன்பாக நான் இறைவாக்கினன் எலியாவை அனுப்புவேன். 6அவன் பெற்றோரின் இருதயங்களை அவர்களின் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் இருதயங்களை அவர்களின் பெற்றோரிடமும் திருப்புவான்; இல்லாவிடில் நான் வந்து நாட்டைச் சாபத்தால் தண்டிப்பேன்.”

ទើបបានជ្រើសរើសហើយ៖

மல்கியா 4: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល