1
நீதிமொழிகள் 11:25
பரிசுத்த பைபிள்
ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 11:25 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 11:24
ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் மேலும், மேலும் பெறுவான். ஆனால் ஒருவன் கொடுக்க மறுத்தால் பிறகு அவன் ஏழ்மையாவான்.
நீதிமொழிகள் 11:24 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 11:2
வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.
நீதிமொழிகள் 11:2 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 11:14
பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள்.
நீதிமொழிகள் 11:14 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 11:30
நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வு தரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக்கொடுக்கிறான்.
நீதிமொழிகள் 11:30 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 11:13
அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.
நீதிமொழிகள் 11:13 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 11:17
இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 11:17 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 11:28
தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான்.
நீதிமொழிகள் 11:28 ஆராயுங்கள்
9
நீதிமொழிகள் 11:4
தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.
நீதிமொழிகள் 11:4 ஆராயுங்கள்
10
நீதிமொழிகள் 11:3
நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.
நீதிமொழிகள் 11:3 ஆராயுங்கள்
11
நீதிமொழிகள் 11:22
அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
நீதிமொழிகள் 11:22 ஆராயுங்கள்
12
நீதிமொழிகள் 11:1
பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே.
நீதிமொழிகள் 11:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்