இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி
1 கொரிந்தியர் 14:1ல், “அன்பை நாடுங்கள் (பின்பற்றுங்கள்)” என்று பவுல் கூறுகிறார். அதாவது, அன்பு உங்களது வாழ்க்கையின் பிரதான இலக்காக இருக்கட்டும் என்று அவர் கூறுகிறார். நாடுங்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை Diokete என்பதாகும். அது தீவிரத்தை குறிக்கும் வார்த்தையாகும். பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு கிறிஸ்தவர்களை எவ்வளவு தீவிரமாக பின்தொடர்ந்து உபத்திரவப்படுத்தினார் என்பதைக் குறிக்கும்படி இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம் அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:14) என்று கூறும்போதும் இந்த வார்த்தையைத்தான் பவுல் பயன்படுத்துகிறார். இதே கிரேக்க வார்த்தை வெளிப்படுத்தல் 12:13 லும் லூக்கா 17:23 லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அன்பு ஒரு வேலையாகும். அதில் நாம் அறிந்தும் அறியாமலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இருபத்து நான்கு மணிநேரமும் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
பழக மிகவும் இனியவர்கள் கூட கொஞ்ச காலம் கழித்து நாம் அன்பு காட்ட முடியாதவர்களாகி விடுகிறார்கள். என்னுடைய நண்பனை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கத் துவங்கும் போதுதான், உங்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை வந்துவிடுகிறது. அப்போதுதான், அன்புகூருவதில் இன்னும் நீங்கள் வெகுதூரம் போக வேண்டியுள்ளது என்பது உங்களுக்கே விளங்க ஆரம்பிக்கிறது. கோன் ஐஸ்கிரீம் கையில் ஒழுகிக் கொண்டிருக்க அப்படியே கார் சீட்டில் ஏறி அமரும் உங்கள் பிள்ளையானாலும் சரி, அல்லது தொழில் சம்பந்தமாக வந்த தொலைபேசி அழைப்பைக் குறித்து உங்களிடம் தெரிவிக்க மறந்த உங்கள் மாமியாரானாலும் சரி, இயற்கை அன்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்கள் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்.
உங்கள் இரண்டு வயது மகன் உணவு மேஜையில் உயரமான நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது, அவனைக் கண்டு இளம் தாயாராகிய உங்கள் உள்ளம் அப்படியே உருகிப்போகிறது. ஆனால் அவன் திடீரென்று இருக்கையில் இருந்து இறங்கி, ஒரு பேனாவை எடுத்து சுத்தமாக உள்ள வீட்டுச் சுவற்றை அசுத்தப்படுத்தும்போது, “இதுவரை எந்த கண்களும் காணாத, எந்த காதுகளும் கேளாத” காரியங்களை நீங்கள் செய்யாமல், பேசாமல் இருப்பதற்கு உங்களுக்கு ஒரு விசேஷமான உதவி மிகவும் அவசரமாக தேவைப்படும்! அனுதின வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடிகளை சமாளிக்க மனுஷ அன்பு போதாது என்பது அப்போதுதான் புரிய ஆரம்பிக்கும். ‘அன்பு’ என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் புரியாமலேயே இன்றைக்கு அந்த வார்த்தை வெவ்வேறு அர்த்தம் கொள்ளும் விதத்தில் பலரால், பல காரியங்களை குறிக்கும்படி பயன்படுத்தப்படுகிறது. சிலர் ‘விருப்பம் அல்லது ஆசை’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ‘அன்பு’ என்ற வார்த்தையை மாற்றி பயன்படுத்துகின்றனர். தங்களுடைய அதிகமான விருப்பத்தை வலியுறுத்திக்காட்டும்படி அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.