இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி

இவைகளில் அன்பே பிரதானம்

26 ல் 26 நாள்

வழக்கத்துக்கு மாறான அன்பு உடன்படிக்கை உறவாகும்:

தேவன் உங்களுக்கு வாக்கு கொடுப்பது மட்டுமல்ல, அதை நிறைவேற்றவும் செய்கிறார். “நான் ஒருபோதும் ஒருபோதும் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கை விடுவதுமில்லை” (எபிரெயர் 13:5 தி லிவிங் வேதாகமம்) என்பது அவர் உங்களுக்கு கொடுத்த வாக்கு. உங்கள் ஜீவகாலமெல்லாம் அவர் அதைக் காக்க சித்தமாயிருக்கிறார். யார் உங்களை நேசிக்க விரும்பினாலும், அதை செய்ய அவர்கள் சித்தங்கோள்ள வேண்டும். எனக்கு இதை வாக்குப்பண்ணுங்கள் என்று நீங்கள் கேட்டால், அதற்கு பதில் சொல்ல விரும்பாமல் நழுவப் பார்க்கும் ஒருவரை, பொறுப்பெடுக்க விரும்பாத ஒருவரை, எதற்கும் பதில் சொல்லாமல் தவிர்க்கும் ஒருவரைக் கண்டால், அவரை விட்டு விலகுங்கள், அவர்தன் வழியே போகட்டும். தேவன் உங்களுக்காக ஒரு சிறந்த வாழ்க்கையையும், சிறந்த நபரையும் வைத்துள்ளார். அந்த நபர் உங்களை நேசித்து, உங்களுக்காகவே இருப்பார்.

அகாபே அன்பைக் குறித்த இந்த சிறிய போதனையின் முடிவில் ஒன்றை உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசிக்கிறேன்: அன்பை ஆழமாய் சோதனை செய்யலாம், நுட்பமாய் ஆராய்ச்சி செய்யலாம். அது ஒருக்காலும் தோற்காது, ஒழியாது, திடன்கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் அன்பு நதியை அவிழ்த்து விடுங்கள், அது ஆயிரம் மடங்கு அதிகமாய் திரும்ப உங்களிடம் வந்து சேரும்!

வேதவசனங்கள்

நாள் 25

இந்த திட்டத்தைப் பற்றி

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.