இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி
அனுதினமும் நாம் அனுபவித்துவரும், உள்ளத்தை உடைக்கும் ஒரு அனுபவம். விரக்தி, தனிமை உணர்வு, சுயபரிதாபம், அலட்சியம், வெறுமையின் உணர்வு, பகைமை உணர்வு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, பொறாமை போன்ற காரியங்களும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய கிரிமினல் குற்றங்களும், நம்முடைய உள்ளத்தில் தோண்டப்பட்டுள்ள குழிகளில் களைகளைப்போல வளர்ந்து விட்டிருக்கிறது. யாருக்கும் இவைகளைக் குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லை. ஆனால் மறுபக்கம், தேவையில் வாழும் மக்களுக்கு சுயநலம் கருதாமல் நாம் உதவும்போது, ஆழ்ந்த திருப்தி நம்முடைய உள்ளங்களை ஆட்கொள்கிறது. எனவே, இது நாம் சந்திக்க வேண்டிய ஒரு நிஜம் – “தேவன் அக்கறை காட்டுகிறபடியால் நாமும் அக்கறை காட்டுகிறோம். நிர்பந்தமான நம்மை அவர் நேசிக்கிறபடியால், அவரைப் போலவே நாமும் நிர்பந்தமான மக்களை நேசிக்க வேண்டும்!” (1 யோவான் 4:11).
அன்புதான் உலகிலேயே மிகவும் வல்லமையான சக்தியாகும். அது தடைகளை தகர்த்தெறிகிறது. உந்துதலுக்கு அடிப்படையே அதுதான். அன்பும் அரவணைப்பும் தன்னுடைய குடும்பத்தில் எப்போதும் மாறாமல் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், வீட்டில் இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்காக குளிர் வாட்டும் இரவிலும், கொஞ்சம்கூட முறுமுறுக்காமல், முணுமுணுக்காமல் இரவு நேர (Night Shift) வேலைக்கு செல்லும் ஒரு தகப்பனுடைய உழைப்புக்குப் பின்னால் உந்துதல் இருக்கிறது.
சரீரத்தில் என்னதான் வலியும் பிரச்சனையும் இருந்தாலும், வீட்டை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவி, சமையல் செய்து, துணிகளை துவைத்து, செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் கணவனும், பிள்ளைகளும் மாலை வீடு திரும்புவதற்குள் கொஞ்சம்கூட சளைக்காமல்,, புன்சிரிப்புடன் செய்து முடிக்கும் தாய்மார்களின் உந்து சக்தியும் இந்த அன்புதான். கணவன் அல்லது மனைவியின் துணையின்றி தனித்து பிள்ளைகளை வளர்ப்பவர்கள்கூட, நண்பர்களுடன் வெளியே செல்வதை பிள்ளைக்காக தவிர்ப்பது, பிள்ளையுடன் ஜெபத்தில் நேரத்தை செலவிடுவது, பிள்ளையுடன் விளையாடி பொழுது போக்குவது என இப்படி பல காரியங்களை செய்து, அந்தப் பிள்ளைக்கு தங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தி காட்டுகிறார்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.