கவலைகளை மேற்க்கொள்ளுதல்மாதிரி

கவலைகளை மேற்க்கொள்ளுதல்

5 ல் 5 நாள்

பயத்திலிருந்து விடுதலை

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4

என் உள்ளத்திற்குள் பயம் என்னை அறியாமல் இரகசியமாக நுழைந்து விடுகிறது. நீ உதவியற்றவன், நம்பிக்கையற்றவன் என்ற நிலையையும் உண்டாக்கி விடுகிறது. என் சமாதானத்தையும், மனதை ஒருமுகப்படுத்தி சிந்திப்பதையும் களவாடி விடுகிறது. நான் எதற்காகப் பயப்படுகிறேன்? என் குடும்பத்திற்காகவும், எனக்கு அருமையானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் மிகவும் கரிசனை கொள்கிறேன். பணியை இழக்க நேரிடும்பொழுதும் உறவுகளில் முறிவு ஏற்படும்பொழுதும் திகில் அடைகிறேன். பயத்தை என் உள்ளத்திற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வதால் மனம் எதையும் நம்புவதற்கான ஓர் மனப்பக்குவத்தை இழந்து விடுகிறது.

பயங்களும், கவலைகளும் இவ்வாறு நம்மைத் தாக்கும்பொழுது சங்கீதம் 34ல் தாவீது ஏறெடுக்கும் ஜெபத்தை நாம் நினைவில் கொள்வது எவ்வளவு அருமையானது! “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (வச.4). நமது பயத்திலிருந்து தேவன் நம்மை எவ்வாறு விடுவிப்பார்? “நாம் அவரை நோக்கிப் பார்க்கும்பொழுது (வச.5). நாம் அவரையே நோக்கிப் பார்க்கும்பொழுது நமது பயங்கள் மறைந்து போகின்றன. நாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க அவர் மீது நம்பிக்கை வைக்கிறோம். பின் தாவீது மற்றோர் விதமான பயத்தை இங்கே குறிப்பிடுகிறார். நம்மை உணர்வற்றவர்களாக்கும் பயமல்ல, அது கர்த்தருக்குப் பயப்படுதல், கர்த்தருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்கி நமக்கு கனத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும் தூதர்களின் பாதுகாப்பு. அந்த பயத்தினால் அது நமக்குக் கிடைக்கிறது (வச.7). அவர் நல்லவர் எனவே அவரை நாம் அடைக்கலமாகக் கொள்ளலாம் (வச.8).

இப்படிப்பட்ட அவருடைய ஆச்சரியமான உண்மை, பயத்தை புறம்பே தள்ள நமக்கு உதவுகிறது. தேவன் யார் என்றும் அவர் எவ்வளவாய் நம்மை நேசிக்கிறவரென்றும் நாம் உணரும்பொழுது, நாம் அவருக்குள் இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளலாம் (வச.9).“அவருக்குப் பயந்தவர்களுக்கு குறைவில்லை” என்று தாவீது முடிவுக்கு வருகிறார். கர்த்தருக்கு பயப்படும்பொழுது, நாம் பயத்திலிருந்து விடுதலை பெறலாம் என்று அறிந்து கொள்வது எவ்வளவு ஆச்சரியமானது.

உங்கள் பயத்திலிருந்து உங்களை விடுவிக்க தேவனிடம் மன்றாடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

கவலைகளை மேற்க்கொள்ளுதல்

நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக இந்தியா எங்கள் தினசரி ரொட்டிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
https://tamil-odb.org/subscription/india/