உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!மாதிரி

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

6 ல் 2 நாள்

“நித்தியத்தை   மனதில் கொண்டே தேவன் உங்களைப் படைத்தார்”

தேவன் நம்மைப் படைக்கும்போது, 70 அல்லது 80 வருஷ வாழ்க்கைக்கும் மீறிய பெரிய திட்டத்துடனே படைத்தார்.   நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு பிரத்தியேகத் திட்டத்தை வைத்துள்ளார்.   அவரது திட்டம் நமது இவ்வுலக வாழ்க்கை, நித்திய பரலோக வாழ்க்கை   இரண்டையும் உள்ளடக்கியது. யாக்கோபு 4:14 நமது வாழ்வின் இவ்விரண்டு   பக்கங்களுக்கிடையேயுள்ள வித்தியாசத்தை விளக்குகிறது. 

“உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே”   என்று யாக்கோபு 4:14 சொல்லுகிறது. 

“வாழ்க்கை குறுகியது” என்று அடிக்கடி   சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நித்தியத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அது உண்மைதான். 

“ஒரேதரம் மரிப்பதும், பின்பு   நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு   நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரேயர் 9:27) என்று சத்திய வேதம் உரைக்கின்றது.

நம் அனைவருக்குமே சரீர மரணம்   நேரும். ஆனால், சரீர மரணம் நமது மாமிச உடலின் முடிவே தவிர, ஆத்துமாவின் மரணம் அல்ல. நமது ஆத்துமா, அல்லது, நமது சரீரத்தின் உள்ளே வாழும் ஜீவனுள்ள ஆவி   நித்தியமானது. நமது ஆத்துமா பரலோகம் அல்லது நரகம் இவ்விரண்டில் ஏதேனும் ஒரு   இடத்தில் தனது நித்திய காலத்தைச் செலவிடும். 

பரலோகம் என்பது தேவன் வசிக்கும்   நித்திய இராஜ்ஜியம். நரகம் என்பது தேவனிடமிருந்து முற்றிலுமாகப் பிரிந்து இருப்பது.   

நமது இயற்கையான பிறப்பு, சரீரத்தில் இவ்வுலகில் வாழும் நிரந்தரமற்ற வாழ்வின் தொடக்கம் மட்டுமல்ல, இவ்வுலகிலும் நித்திய நித்தியமாகவும் வாழப்போகிற ஆவிக்குரிய வாழ்வின்   தொடக்கமும் கூட. ஆகவே, நித்திய வாழ்க்கையை கருத்திற்கொண்டு   கணித்து இவ்வுலக வாழ்க்கை மிகவும் சிறியது என்று சிலர் சொல்லலாம்; ஆனால், இந்தக்கூற்று அத்தனை எளிதான உண்மையல்ல. இவ்வுலக வாழ்வில்   நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள்தாம், உண்மையிலேயே நித்தியத்தில்   எங்கே வாழப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கின்றன; மிக முக்கியமாக, இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் ஆண்டவராக   ஏற்றுக்கொள்ளும் தீர்மானம். இரட்சிப்பு, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றுதான்.   அவர் மூலமாக மாத்திரமே, தேவனை விட்டுப் பிரிந்து   நித்தியமாய் வாழும்படியான நியமத்தைத் பரலோகத்தில் தேவனோடு நித்தியமாய் வாழும்   படியாக மாற்றமுடியும்.

இயேசு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும்   ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில்   வரான்” (யோவான் 14:6)

இவ்வுலக வாழ்வில் நாம் எடுக்கும்   தீர்மானங்கள் ஏன் முக்கியமானவை என்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இயேசுவை   தங்கள் இரட்சகராக இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளாத மற்றவர்களின் நித்திய வாழ்வையும்   விசுவாசிகளாகிய நாம் வாழும் வாழ்க்கைமுறை பாதிக்கும். கிறிஸ்துவுக்காக வாழும்   வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக நமது வாழ்வை நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தினமும்   கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களாகிய நம் ஒவ்வொருவரையும்   நம்மைச்சுற்றியுள்ள கிறிஸ்துவை அறியாதவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தைக்   கொண்டுவருவதற்குத் தேவன் பயன்படுத்துகிறார். இயேசு சொன்னார்:

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” மத்.5:14-16

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய   ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’   எழுதிய  “ இந்த உலகுக்கு வெளியே;   வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி” 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:
http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)