உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!மாதிரி
“நம் அனைவருக்கும் ஒரு இரட்சகர் தேவை”
ஆதாமையும் ஏவாளையும் தேவன் படைத்தபோது, அவர்களைப் பாவமில்லாமலும் தம்மோடு நெருங்கிய உறவுள்ளவர்களாகவும் படைத்தார். ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறியபோது தங்கள் வாழ்க்கையில் மட்டுமன்றி மனுக்குலம் முழுமைக்கும் பாவத்தைக் கொண்டு வந்தார்கள். ரோமர் 3:23 ஆதாம் ஏவாள் எடுத்த தீர்மானத்தின் நெடுநாள் விளைவுகளை விவரிக்கிறது.
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,” ரோமர் 3:23
ஒருவர் கூட பாவத்துக்கும், அதன் விளைவுகளுக்கும் விலகினவர் கிடையாது; நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிதான். அதன் விளைவாக, நாம் எல்லோரும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம்.நமது பாவம் நித்திய விளைவுகளையும் உருவாக்குகிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்.” ரோமர் 6:23 அ
தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியக்கூடாது என்று ஆதாம்-ஏவாள் எடுத்த தீர்மானத்தினால், அவர்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் (மனுக்குலம் முழுமைக்கும்) சரீரத்திலும் ஆவியிலும் மரணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாயிற்று. அவர்களது தோல்விக்குப் பின்னர், தேவனும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய ஒரு நிலைக்கு வந்தார். பாவம் அப்படியே பெருகும் படி விட்டுவிட்டு, அதன் விளைவாக மனிதகுலம் அழியும்படி விட்டுவிடுவதா? இல்லை, பாவத்தின் பிடியிலிருந்து மனிதர்களை மீட்கும்படி ஒரு உத்தியை உருவாக்குவதா? நல்ல வேளையாக, தம்முடைய அன்பின், கிருபையின் உன்னத வெளிப்பாடாக, தேவன் தம்முடைய குமாரன் மூலமாக இரட்சிப்புக்கான ஏதுவை உண்டாக்கினார்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. யோவான் 3:16
தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23 ஆ
இயேசுகிறிஸ்துவைத் தவிர்த்து, மனிதகுலம் சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுபட வேறு வழியில்லை. கிறிஸ்துவுக்குள் இருக்கும் நமக்கோ, சரீர மரணம் உண்டேயொழிய ஆவிக்குரிய மரணம் (நரகம்) கிடையாது. பதிலாக, நாம் இந்த உலகை விட்டு நீங்கியவுடனே நமக்காக பரலோகத்தில் நித்திய வாழ்வு காத்திருக்கிறது.
இயேசுகிறிஸ்துவின் பரிபூரண பலியின் மூலமாகவும், மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்ததன் காரணமாகவும், நாம் பாவத்தின் ஆவிக்குரிய தண்டனையிலிருந்து தப்பிவிட்டோம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’ எழுதிய “ இந்த உலகுக்கு வெளியே; வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி”
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:
http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)