மன்னிப்புமாதிரி
மன்னிக்கும்படி ஒரு ஜெபம்
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். லூக்கா 6:27-28
1960 ஆம் ஆண்டு, ஆறு வயதாயிருந்த ரூபி பிரிட்ஜஸ் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தை, தென் அமெரிக்காவிலுள்ள வெள்ளையரின் அனைத்து ஆரம்பநிலைப் பள்ளியை கலப்பினப் பள்ளியாக ஒருங்கிணைத்த முதல் குழந்தையாகும். கோபமான பெற்றோர் கூட்டத்தின் சாபக் குரல்களையும், பயமுறுத்தலையும், அவமானங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் ரூபி பள்ளிக்குச் செல்ல உள்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கினர். பள்ளியினுள் பாதுகாப்பாக, ஒரு வகுப்பறையில் தனிமையில் அமர்ந்திருந்த ரூபிக்கு, பார்பரா ஹென்றி என்ற ஆசிரியை மட்டும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரூபியோடு அமர்ந்திருக்க அனுமதிக்கவில்லை.
மிகவும் பிரசித்தி பெற்ற மனநல மருத்துவர் ராபர்ட் கோலஸ் ரூபியை பல மாதங்கள் சந்தித்து, அவள் தன் பயத்தையும் மன அழுத்தத்தையும் மேற்கொள்ள உதவினார். ரூபி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்பும் போதும் ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு, அவர் வியப்படைந்தார். ‘‘தேவனே, தயவு கூர்ந்து இவர்களை மன்னியும். ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்” என ஜெபித்தாள் (லூக். 23:34).
இயேசு சிலுவையில் மொழிந்த வார்த்தைகள், அவர் மீது எறியப்பட்ட வெறுப்பையும், அவமானங்களையும் விடப் பெரியது. அவருடைய வாழ்வில் மிகவும் வேதனையடைந்த நேரத்தில் நம்முடைய தேவன், தான் சீடர்களுக்குப் போதித்த காரியங்களைச் செயலில் காட்டினார். ‘‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், … உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என இயேசு தன் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார் (லூக். 6:27-28, 36).
இயேசு நமக்குக் கொடுத்த அன்பை நாம் பிறரிடம் காட்டும் போது மட்டுமே இந்த குறிப்பிடத்தக்க அணுகுமுறையைச் செயல்படுத்த முடியும். ஆழமான வெறுப்பினைவிட இயேசுவின் அன்பு வலிமையானது.
ரூபி பிரிட்ஜஸ் நமக்கு வழி காட்டினாள்.
தகப்பனே, நீர் எங்களைக் கிருபையாய் மன்னித்தீர், நாங்களும் எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை மன்னிக்க இன்றைக்கு பெலன் தாரும்.
உங்களைச் சபிப்பவர்களை ஆசீர்வதியுங்கள்.
உங்களை துன்பப்படுத்துபவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எது உண்மையான மன்னிப்பு? நாம் எவ்விதம் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதை அறிவதன் மூலம், மன்னிப்பை புரிந்துகொள்ளலாம். இதன் உதவியுடன் கோபம், துரோகம், காயங்கள் போன்ற உணர்ச்சிகளில் இருந்து விடுபட்டு இரக்கமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக எங்கள் டெய்லி ப்ரெட் இந்தியா நெதர்லாந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க: https://tamil-odb.org/subscription/india/?utm_source=YouVersion&utm_campaign=Forgiveness