மன்னிப்புமாதிரி

மன்னிப்பு

5 ல் 5 நாள்

முதல் அடியை எடுத்துவைத்தல்

தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். 2 கொரிந்தியர் 5:19

தாம் டேஷீ தன் வாழ்வில் ஏதோ ஒரு குறையுள்ளதாக உணர்ந்தார். எனவே அவர் ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அதே ஆலயத்திற்குத்தான் அவருடைய மகளும் செல்வது வழக்கம். ஆனால், அவர்கள் இருவரும் இணைந்து சென்றதில்லை. முந்திய நாட்களில் அவர் தன் மகளைக் காயப்படுத்தியிருந்தார். அது அவர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டது. எனவே அவர் ஆலயத்தில் பாடல் வேளை ஆரம்பித்தப்பின் தான் உள்ளே வருவார்.

ஆலய அங்கத்தினர்கள் சுவிசேஷத்தை அவரிடம் பகிர்ந்தனர். தன் நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்பினை  பணிவோடு நிராகரித்து விடுவார். ஆனால், அவர் தொடர்ந்து ஆலயத்திற்கு வந்து கொண்டேயிருந்தார்.

ஒரு நாள் அவர் மிக மோசமாக சுகவீனமடைந்தார். அவருடைய மகள் தன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். கிறிஸ்து தன் வாழ்வை மாற்றியதைக் குறித்து பகிர்ந்து கொண்டதோடு தன் தந்தையோடு ஒப்புரவாகுதலையும் கேட்டார். அன்று இரவு அவர் தன் நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்தார். அந்த குடும்பங்கள் ஒப்புரவாகின. சில நாட்களுக்குப் பின்னர் அவர் மரித்தார். இயேசுவின் சமாதானத்தோடும், தனக்கு அன்பானவர்களிடம் சமாதானத்தோடும் இயேசுவின் பிரசன்னத்திற்குள் சென்றார்.

பவுல் அப்போஸ்தலன், தேவனுடைய அன்பு, மன்னித்தலின் உண்மையைக் குறித்து மற்றவர்களைச் சம்மதிக்கச் செய்யவேண்டுமென எழுதுகிறார் (2 கொரி. 5:11).

தேவனுடைய ஒப்புரவாகுதலின் செயலை மேற்கொள்ள “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” (வச. 14) என்று அவர் சொல்லுகிறார்.

நாம் மற்றவர்களை மன்னிக்க முன்வரும்போது தேவன் அவர்களொடு ஒப்புரவாகுவதற்கு விரும்புகின்றார் என்பதை அவர்கள் உணரச் செய்கிறோம் (வச. 19). இன்று தேவனுடைய வல்லமையின் மீது சார்ந்து அவருடைய அன்பினைக் காட்ட விரும்புகிறாயா?

நாம் பிறரோடு ஒப்புரவாக முழுமனதோடு முயலும் போது,
அவர்களுக்கு தேவனுடைய இருதயத்தைக் காட்டுகிறோம்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மன்னிப்பு

எது உண்மையான மன்னிப்பு? நாம் எவ்விதம் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதை அறிவதன் மூலம், மன்னிப்பை புரிந்துகொள்ளலாம். இதன் உதவியுடன் கோபம், துரோகம், காயங்கள் போன்ற உணர்ச்சிகளில் இருந்து விடுபட்டு இரக்கமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக எங்கள் டெய்லி ப்ரெட் இந்தியா நெதர்லாந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க: https://tamil-odb.org/subscription/india/?utm_source=YouVersion&utm_campaign=Forgiveness