குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி
![குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F12656%2F1280x720.jpg&w=3840&q=75)
"உயிரோட்டமுள்ள சாட்சியாய் வாழுங்கள்"
நம்மிடம் பிறர் கவனிக்கும்படியாக தேவன் எதை வைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்வதே, தினசரி வாழ்வில் உயிரோட்டமுள்ள சாட்சியாய் வாழுவதற்கான ஆரம்பம். இதற்கு ஒரு சிறிய விடை, இயேசு. இதன் அர்த்தம் என்ன?
தேவ விருப்பத்தின்படி நாம் எப்படி வாழ்வது என்பதற்கு இயேசுவே சரியான உதாரணம். இன்றைய உலகிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்த ஓர் உலகில் இயேசு இம்மண்ணில் வாழ்ந்தாலும், தேவனுடைய குணநலன்களை முற்றிலும் கொண்டவராய், நவீன உலகில் வாழ்வதற்கும் ஏற்ற உதாரணமாக வாழ்ந்தார்.
அவர் நம்மில் தேவனுடைய இயல்புகளை வளர்த்து அந்த இயல்புகளைப் பிறர் காண வேண்டுமென விரும்புகிறார். இது இயேசுவோடு நமக்குள்ள தனிப்பட்ட உறவினாலேயே சாத்தியமாகும்.
திராட்சைச்செடியோடு இணந்திருக்கும் கொடியானது செடியிலிருந்து ஜீவனைப் பெற்று கனிகொடுப்பது போல, இயேசுவோடுள்ள உறவில் நிலைத்திருப்பவர்கள் கனி கொடுப்பார்கள் - தங்கள் வாழ்வின் மூலமாகத் தேவனின் இயல்பைப் பிறருக்கு அறிவிப்பார்கள்.
தேவனுடைய இயல்பாகிய ஆவியின் கனி - அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் சாந்தம், இச்சையடக்கம் - நம்மிலும் நம் மூலமாகவும் வெளிப்படும் போது நமது அன்றாட வாழ்வில் நாம் சாட்சியாக மாறுவோம்.
இயேசுவின் நாட்களில் இருந்ததைப்போலவே, நமது வாழ்வின் மூலமாக வெளிப்படும் உயிரோட்டமுள்ள ஆவியின் கனியோ மற்றவர்களால் கவனிக்கப்படாமல் போகாது. கிறிஸ்தவர்களின் கவனத்தையும், மற்றவர்களின் கவனத்தையும் ஒருசேரக் கவரும்; அதைப்பற்றி பிறர் நம்மிடம் விசாரிப்பது ஓர் அசாதாரணமான காரியமாக இருக்காது.
ஆயத்தமாயிருங்கள். நீங்கள் எதிர்பாராத வேளையில், உங்களைக்கவனிப்போர் உங்களிடம் விசாரிக்கலாம். நீங்கள் எப்படி மீட்கப்பட்டீர்கள் என்ற சாட்சியும், உங்கள் அனுதின வாழ்வில் ஆண்டவர் ஆற்றுகிற செயல்களும் அவர்களோடு நீங்கள் உரையாட நல்ல துவக்கமாயிருக்கும். உங்கள் சபைக்கோ, ஐக்கியத்துக்கோ அழைத்து, தேவனோடு அவர்கள் உறவைக்கண்டுகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
![குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F12656%2F1280x720.jpg&w=3840&q=75)
மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்னும் கூர்மையாவதற்குக் கீழ்க்கண்ட வாசிப்புத்திட்டத்தைப் பின் இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2