“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!மாதிரி
“வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கேதுவாக உங்களைப் பெலப்படுத்துகிறார்”
ஏற்ற கருவிகள் இல்லாமல், ஒரு சிறுவேலை கூட பெரிய போராட்டமாகிவிடும். உதாரணமாக, திருகாணியை அகற்றுவது மின் ஸ்க்ரூட்ரைவர் இருக்குமானால் மிக எளியவேலை. அது இல்லாத பட்சத்தில் மிகவும் எரிச்சலான வேலையாகிவிடும்.
வாழ்வில் நமக்கு ஏற்ற கருவிகள் கொடுப்பதில் தேவன் முக்கிய கவனம் செலுத்துகிறார். ஒரு பெரிய முடிவெடுப்பதற்குத் தேவையான ஞானம், ஒரு கெட்ட பழக்கத்தை முறியடிப்பதற்கு வேண்டிய வைராக்கியம், ஒரு கடினமான சூழ்நிலையைக் கடப்பதற்குத் தேவையான கூடுதல் விசுவாசம், நம்பிக்கை எதுவானாலும் ஆசீர்வாதமான நிறைவாழ்வை வாழத்தேவையான அனைத்தையும் நமக்கு அளிக்கத் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
“இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” – ஏசயா 40:30-31
நமது நம்பிக்கையை அவர் மேல் வைப்பது, நாம் சந்திக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் தேவையான கருவிகள் அடங்கிய பெட்டியைக் கையில் வைத்திருப்பதற்கொப்பாகும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)