“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!மாதிரி

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

8 ல் 7 நாள்

“ நீங்கள் வளரும்படி உங்களில் குணநலன்களை உருவாக்குகிறார்”

நல்ல குணநலன்கள்   இரட்சிக்கப்பட்டவுடனே நம்மில் வந்துவிடுவதில்லை; நேரமெடுத்து, கற்று வளர்க்க வேண்டிய ஒன்று. கிறிஸ்துவைப்போன்ற   குணங்களை நமக்குள் உருவாக்குவது தேவனது பிரதான இலக்குகளில் ஒன்று. இயேசுவைப்போன்ற   குணநலன்களை நாம் வளர்த்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார். இந்தக்   குணங்களை வேதம் பரிசுத்த ஆவியின் கனிகள் என்றுரைக்கிறது:

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” – கலாத்தியர் 5:22-23.

சவால்களின் மத்தியில் சிலசமயம்   நமது சொந்த பலத்தில் எதிர்ப்புகளைச் சமாளிக்க எத்தனிக்கிறோம். அப்படிச்   செய்யும்போது, சிரமங்களைச் சமாளிப்பதற்காக “குறுக்கு வழியில்”   சென்று நமது குணநலன்களைச் சமரசம் செய்து கொள்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் பெலனை   நாம் நாடும்போது, நமது போராட்டத்தின் பாதையிலும் நாணயம், உண்மை, நேர்மையைக் காத்துக்கொள்ள உதவுவார்.

வெற்றியின் காலங்களிலும், வேதம் கூறும் தரத்தை நாம் காத்துக்கொள்ள வேண்டும். நம்மை நாமே   மெச்சிக்கொள்கிற பெருமையும்   அகங்காரமும் தேவன் நம்மில் வளர விரும்புகிற கிறிஸ்தவக் குணங்களுக்கு நேர்   எதிரிடையானவை. உண்மையில், தேவனிடமிருந்து முன்னேற்றத்தை   எதிர்பார்க்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் சாந்தம் ஒரு அத்தியாவசியத்தேவை.

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்” – மத்தேயு 5:5

நமது சவால்களிலும், வெற்றிகளிலும் சமமாக கிறிஸ்துவின் குணநலன்களோடு வாழப் பழகும்போது, தேவனோடுள்ள நமது நடக்கையில் நாம் முன்னேறத் தொடங்குகிறோம். ஆவியின் கனியோடு   நடப்பது நமது உன்னத நன்மைக்கும், தேவனது கௌரவத்திற்கும் உகந்தது என்பதை உணர   ஆரம்பிக்கிறோம். தேவனோடுள்ள நடக்கையில் நாம் முன்னேற முன்னேற, நமது வாழ்க்கையில் இன்னும் அதிக மகத்தான அசீர்வாதங்களை   ஊற்றிக்கொண்டேயிருப்பார்.

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

நீங்கள் தனித்திருக்கவில்லை.   வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும்,   நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும்   இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய   உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள்   எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான   வழிகாட்டி” (A Christian’s Guide to   Growth and Purpose) என்ற   புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:  http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)

சம்பந்தப்பட்ட திட்டங்கள்