கைல் ஐடல்மென் உடன் கெட்ட குமாரனின் உருமாற்றம்மாதிரி
“நேர்மை - குணப்படுத்தும் நேர்மை”
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்களுடனும் கடவுளுடனும் நேர்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள். 1 யோவானில், நம்முடைய பாவங்களை நாம் கடவுளிடம் ஒப்புக் கொள்ளும்போது, அவர் உண்மையுள்ளவராக இருந்து, நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநீதியிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவார் என்று வேதாகமம் சொல்கிறது. இயேசு சிலுவையில் மரித்தபோது, நமக்குத் தகுதியான தண்டனையை அவர் எடுத்துக் கொண்டார் என்றும் வேதாகமம் கூறுகிறது. இயேசு நமது பாவங்களுக்காக மரித்தார், அதனால் நாம் நமது பாவங்களை ஒப்புக் கொண்டு அறிக்கை செய்யும் போது, தேவன் நம்மை மன்னிப்பார்.
வழக்கமாக, “நாம் நம்முடனும் தேவனிடமும் நேர்மையாக இருந்தால் போதும்.” இதை விட வேறு எதுவும் வேண்டியதில்லை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம்: ஆனால் ஆஹா அனுபவத்திற்கு மேலும் தேவை.
யாக்கோபு 5:16 ஆனது உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள் என்று பேசுகிறது “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு.” நம்முடைய பாவங்களைப் பற்றி நாம் தேவனிடம் நேர்மையாக இருக்கும்போது, அவர் நம்மை மன்னிப்பார், ஆனால் நாம் மற்றவர்களுடன் நேர்மையாக இருக்கும்போது, குணமடைகிறோம்.
“குணப்படுதல்” என்றால் என்ன?
சரி, நம்முடைய பாவங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்வதற்கான நடைமுறை நம்மைப் பொறுப்பேற்க வைக்கிறது, மேலும் நமது போராட்டத்தின் சுழற்சியை உடைக்க தேவையான ஊக்கத்தைக் கண்டறிய உதவுகிறது. நாம் இருட்டில் வைத்திருந்ததை எடுத்து அதை உதைத்து ஒளியில் இழுக்கும்போது, நம்மீதான அதன் அதிகாரத்தை அப்பாவம் இழக்கிறது என்பதைக் காணலாம்.
குணப்படுதல் பற்றி யாக்கோபு பேசுவது, நீங்கள் நினைப்பதை விட மிகவும் எளிமையானது. இதைப் பாருங்கள்: மன அழுத்தத்தை சமாளிப்பது என்ற தலைப்பில் ஒரு மதச்சார்பற்ற சமகால உளவியல் பாடநூல் ஒப்புதல் வாக்குமூலத்தின் குணப்படுத்தும் சக்தியை உறுதிப்படுத்துகிறது. அதன் ஆசிரியர் இவ்வாறாக கூறுகிறார், “இரகசியங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு சராசரியாக, அப்படி இல்லாதவர்களைக் காட்டிலும் அதிகமான உடல் மற்றும் மன புகார்கள் உள்ளன… [அதிக கவலை, மனச்சோர்வு மற்றும் முதுகுவலி மற்றும் தலைவலி போன்ற உடல் அறிகுறிகள் உட்பட… ஆரம்பத்தில் நமது அறிக்கைகள் சங்கடமாக இருந்தாலும் நமது இருண்ட இரகசியங்கள் வாய்மொழியாகக் வெளிவரும் வேளையில் அதனால் கிடைக்கும் நிவாரணம் நம்மை குணப்படுத்தும்.”
நீதிமொழிகள் 28:13 இந்த கண்டுபிடிப்புகளை எதிரொலிக்கிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."
* உங்கள் பாவங்களை மற்றவர்களிடம் ஒப்புக் கொள்ளும் செயல் கடந்த காலத்தில் உங்களுக்கு எவ்வாறு உதவியது? வெளிச்சத்திற்கு அம்பலப்படுத்த நீங்கள் விரும்பாத ரகசிய பாவங்கள் ஏதேனும் உள்ளதா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கைல் ஐடல்மான் என்பவருடைய "ஆஹா" என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இத்திட்டதுடன் சேருங்கள், இதில் அவர் தேவனிடம் நம்மை நெருங்கி வரக்கூடிய 3 கூறுகளை கண்டுபிடிப்பதால் இதனை அறியும் நாமும், நம் வாழ்க்கையை நன்மைக்காக மாற்ற முடியும். எல்லாவற்றையும் மாற்றும் தேவனின் தருணத்திற்கு நீங்கள் தயாரா?
More