கைல் ஐடல்மென் உடன் கெட்ட குமாரனின் உருமாற்றம்மாதிரி
“இரு மகன்களுக்கும் கிருபை”
மூத்த குமாரன் தனது தந்தையின் செயல்களைப் பார்த்து கோபமடைந்தான். இந்த மூத்த சகோதரர் கடினமாக உழைத்து, உண்மையாக வயல்களை பேணியிருக்கலாம், ஆனால் அவன் தனது தந்தையின் வீட்டிலேயே வழி தவறிப் போனான்.
விழிப்புணர்வு இல்லை. நேர்மையும் இல்லை. நடவடிக்கையும் இல்லை.
உண்மை என்னவென்றால், அவனும் ஒரு மோசமான மகன் என்பதே. அவனுக்கும், அவன் தந்தையின் மனதினை குறித்த ஒரு நெருங்கிய புரிதல் இல்லை. அவனும் வழி தவறிப் போனான், ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை. டிம் கெல்லர் இதை இவ்வாறு குறிப்பிடுகிறார், "கெட்ட குமாரன் தனது துன்மார்கத்தில் வீழ்ந்தான், ஆனால் நல்ல அல்லது மூத்த குமாரன் அவனது நன்மையில் வீழ்ந்தான்."
நாம் ஒருவேளை தொலைதூர நாட்டிற்கு சென்றிருக்க மாட்டோம். நாம் ஒரு சுவாரஸ்யமான மத தற்குறிப்பைக் கொண்டிருக்கலாம். எல்லா விதிகளையும் பின்பற்றியிருக்கலாம். தொலைதூர நாட்டில் நமக்கு தெரிந்த அனைத்து மக்களையும் நினைத்து வேதாகமத்தை நாம் படித்திருக்கலாம். ஆனால், இயேசு அவை அனைத்தையும் நமக்காக பேசிக்கொண்டிருந்தால் என்ன செய்வது.
அதிர்ஷ்டவசமாக, மூத்த குமாரன் வயலில் இருந்தபோது, தந்தை கொண்டாட்டத்தை விட்டுவிட்டு அவனிடம் பேச வெளியே சென்றார். அவர் மகனுடன் நேரடியாக பேசினார்.
இது தேவனைப் பற்றி என்ன சொல்கிறது? தேவன் தனது குழந்தைகளுடனான உறவுக்காக ஏங்குகிறார். உங்கள் வாழ்க்கை மூத்த மகனை போல் அல்லது இளையவரை போல் ஒத்திருக்கிறதா.
இளைய மகனின் அவமதிக்கும் தேர்வுகள் மற்றும் பொறுப்பற்ற வாழ்க்கைக்குப் பிறகும், தந்தை அவரை முத்தங்கள் மற்றும் அணைப்புகளுடன் தழுவினார். மூத்த சகோதரரின் கடுமையான வார்த்தைகளுக்கும் அவமதிப்புக்கும் பிறகும், தந்தை அன்பாக தன்னை அவனிடம் விளக்கிக் கொண்டார். ஆணாதிக்கம் பரவலாக பின்பற்றப்பட்ட பண்டைய காலங்களில் தந்தைக்கு ஒருபோதும் தன்னை விளக்கிக் கொள்ள வேண்டியதில்லை. குடும்பங்களில் ஜனநாயகம் இருந்ததில்லை; சர்வாதிகாரங்களாக இருந்தன. ஆனாலும் தந்தை மூத்த சகோதரனின் கோபத்திற்கு மென்மையான பொறுமையுடனும் கருணையுடனும் பதிலளித்தார்.
தேவன் நீதியைக் கோரும் கோபமான தந்தையாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கிறோம், ஆனால் இயேசு மூலமாக, நாம் தகுதியற்றபோது அவர் நமக்கு அன்பையும் கிருபையையும் தருகிறார். இறுதியில், லூக்கா 15-ல் உள்ள கதை கீழ்ப்படியாத இரண்டு மகன்களைப் பற்றியது அல்ல. இது தனது பிள்ளைகளை நிபந்தனையின்றி நேசிக்கும் ஒரு தந்தையைப் பற்றியது.
* நீங்கள் பாவம் செய்யும்போது, அவர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்? என்று தேவனைை எப்படி கற்பனை செய்கிறீர்கள், அவருடைய முடிவில்லாத கிருபையும் அன்பும் முழு ஆஹா செயல்முறையையும் எவ்வாறு தூண்டுகிறது.
இந்த வாசிப்பு திட்டத்தை நீங்கள் ரசித்தீர்களா? அப்படியானால், முழு புத்தகத்தையும் வெல்ல இங்கே சொடுக்கவும்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கைல் ஐடல்மான் என்பவருடைய "ஆஹா" என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இத்திட்டதுடன் சேருங்கள், இதில் அவர் தேவனிடம் நம்மை நெருங்கி வரக்கூடிய 3 கூறுகளை கண்டுபிடிப்பதால் இதனை அறியும் நாமும், நம் வாழ்க்கையை நன்மைக்காக மாற்ற முடியும். எல்லாவற்றையும் மாற்றும் தேவனின் தருணத்திற்கு நீங்கள் தயாரா?
More