கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்மாதிரி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

4 ல் 4 நாள்

ஆழமாக மூச்சு இழுத்து விட்டுக் கொள்ளுங்கள் 

மனித உடலில் தனியாக இயங்கும் ஒரு நரம்பு அமைப்பு இருக்கின்றது. இதில் இரண்டு உதவி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றுக்கு பரிதபிக்கும் உணர்வு நரம்பு அமைப்பு மற்றும் இணை பரிதபிப்பு உணர்வு நரம்பு அமைப்பு என்று பெயர்.  முதல் அமைப்பானது நமது கவலை என்னும் பதிற்செயலைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது எதிர்த்துப் போராடு, அல்லது ஓடு, பயந்திரு போன்ற செயல்பாடுகளை உருவாக்குகின்றன. இந்த பதிற்செயல்கள் வேகமான இதயத்துடிப்புக்கும் அதிக இரத்த அழுத்தத்திற்கும், ‘கார்ட்டிசால்’ என்ற திரவம் சுரப்பதற்கும் காரணமாக இருக்கின்றன. இரண்டாவது அமைப்பானது, அமைதியையும், தளர்வையும் கொடுத்து பயம் என்னும் பதிற்செயலுக்கு எதிர் செயலாற்றுகிறது. நீங்கள் ஆழமாக மூச்சை இழுத்து விடும் போது இது நடைபெறுகிறது. இந்த மூச்சு இழுத்துவிடுதல் என்பது நாம் எப்போதும் மூச்சு விடுவது போல நெஞ்சுப்பகுதியில் இருந்து அல்ல, வயிற்றின் ஆழத்தில் இருந்து மூச்சு இழுத்து விடுவது ஆகும். அதாவது நாம் வேண்டுமென்றே மூச்சை உள்ளே இழுத்து பின்னர் வெளியே விடுவதைச் சொல்கிறது. இதன் மூலமாக மூளையின் ‘அமிக்டாலா’ என்ற பகுதிக்கு ஒரு குறிப்பு அனுப்பப்படுகிறது.  “எந்த ஆபத்தும். இல்லை அமைதியாக இருக்கலாம்” என்று இந்த குறிப்பு மூளைக்குச் சொல்கிறது.

ஏன் இந்த சிறிய அறிவியல் பாடம்? ஆழமாக மூச்சு விடுவதற்கும் பயத்தின் பதிற்செயலுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு பயமும் படபடப்பும் இருந்தால், உங்கள் ஆலோசகர் உங்களை மூச்சு இழுத்துவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்வார். அதன் மூலமாக உங்கள் உடலை தளர்வடைய உதவி செய்வார்.  இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு உன்னதமான படைப்பாளியான கர்த்தரால் படைக்கப்பட்டிருக்கிறோம். அவர் ஒரு போதும் தவறு செய்வதில்லை. நம்மைப் படைத்த போது அவர் நம் மூக்குகளில் ஜீவ சுவாசத்தை ஊதினார். இது தான் நாம் மரணத்தில் கண்களை மூடும் வரை, மூச்சு நம்மை விட்டுப் பிரியும் வரை நம்மைக் காப்பாற்றுகின்றது. இயேசுவை நமது சொந்த மீட்பராக அறிந்திருப்பதன் மூலம், நம் வாழ்வில் இருக்கும் தேவைகளை அவருக்கு அறிவித்து ஒப்புக் கொள்வதன் மூலமாக, நாம் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்வில் அழைக்கிறோம். இவருக்கு ‘ரூவா ஹாக்கோதேஷ்’ என்று எபிரெய மொழியில் பெயர் இருக்கிறது.  ‘ரூவா’ என்பதற்கு ஆவி என்று காற்று என்றும் மூச்சுக்காற்று என்றும் பொருள் உண்டு. இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் தனது சீடர்களை சந்தித்த போது, அவர்கள் மீது ஊதி, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.  பழைய ஏற்பாட்டில், எசேக்கியேல் தீர்க்கதரிசி உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கை தரிசனத்தில் கண்டார். அந்த எலும்புகளுக்கு தீர்க்கதரிசனம் சொல்லி ஒரு படையை எழுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்களைக் குறிப்பது ஆகும்.   உலகத்தின் நான்கு திசைகளிலும் இருந்து காற்று வரும்படி கட்டளையிட்டு அவற்றுக்குள் உயிர் வரச் செய்ய கட்டளை கொடுக்கும்படி சொன்னார். நமது உயிர் மூச்சுக்காற்று நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமானது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிந்த உண்மை அல்லவா?  கவலை நம்மைப் பிடித்துக் கொள்ளும் போது அது நம்மை அழுத்தி நம் உயிரையே நம்மை விட்டு வெளியே அனுப்புவதாக மிரட்டுகிறது. அந்த நேரத்தில் தான், பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கும் நமது உடலின் மீதுள்ள நம் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும் நமக்கு உயிரைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவராகவும், நாம் வெளியிடும் ஒவ்வொரு மூச்சும் கர்த்தருக்கு தொடர்பில்லாததாகவும் இருக்கட்டும். அடுத்த முறை உங்கள் சிந்தனைகள் கட்டுப்பாடு இல்லாமல் போகும் போது, உங்கள் மனதில் இருக்கும் “நிறுத்து” என்ற பொத்தானை அழுத்தி, கர்த்தரின் உயிர் தரும் காற்றை ஆழமாக உள்ளே இழுத்து மெதுவாக வெளியே மூச்சை விடும் போது கர்த்தரின் அன்பு உங்களை முழுவதுமாக கழுவி விடும்படியாகவும், கர்த்தரின் சமாதானமானது உங்களது சோர்படைந்த ஆன்மாவை நிரப்பும்படியாகவும் அனுமதியுங்கள்.


ஜெபம்:

அன்பின் கர்த்தாவே, 

என் உடலில் இருக்கும் ஒவ்வொரு மூச்சிலும் நான் உம்மை ஆராதிக்கவும், உமக்குரிய மகிமையை முழுவதுமாக உமக்குக் கொடுக்கவும் உதவி செய்யும். உம்மை உயர்த்தவும் மகிழ்ச்சியான ஒரு நிலையில் வாழ்க்கையை அனுபவிக்க எனக்கு கற்றுத் தாரும். இயேசுவில் எனக்கு வாக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முழுமையையும், ஐசுவரியங்களையும் நான் அனுபவிக்கவும் உதவும். கவலையிலிருந்து முழுமையான விடுதலையையும் சுகத்தையும் நான் பெற்றுக் கொள்ளச் செய்யும் ஆண்டவரே. நான் கவலைப்படும் ஒவ்வொரு நேரமும், நான் உம்மை என் சூழ்நிலைக்கு வரவழைத்து என்னைக் கவனித்துக் கொள்ள உம்மையே நம்ப உதவி செய்யும்.

இவற்றை எல்லாம் இயேசுவின் பெயரால் கேட்கிறேன். 

ஆமென்.

நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan