சபையின் பொறுப்பும் எதிர்காலமும்மாதிரி

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

3 ல் 2 நாள்

உழியர்களும் ஊழியங்களும்

உழியர்களும் ஊழியங்களும் ;
கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன். 1கொரிந்தியர் 16: 7
கடவுள் அனுமதி பெற்று கடவுளுடைய ஊழியர்களின் தங்குமிடங்களும் கடந்து போகும் வழிகளும் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவர் அனுமதியின்றி வழி நடத்துதலின்றி ஊழியங்களுக்கு செல்ல வேண்டாம். பவுல் கடவுளது வழி நடத்துதலை ஊழியங்களில் பெற்று நடப்பதை நாம் பல பகுதிகளில் வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டே தனது ஊழியத்தையும் தனது ஊழிய பயணத்தையும் வரையறைப் படுத்துகிறார், உமது சமூகம் முன் செல்லவில்லையென்றால் நாங்கள் பிரயாணம் செய்வதில்லை என்ற முன்னோர் அர்ப்பணிப்பு நமக்கு வேண்டும். பிரயாண கிருபைக்காக ஜெபிக்கவேண்டும். குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கும் அனுபவமும் பெறவேண்டும். குற்றம் சுமத்துகிறவர்கள் மத்தியில் திறந்த வாசலை தேவன் திறப்பதையும் பலனுள்ள ஊழியத்தை வைத்திருப்பதையும் உணர வேண்டும் .எதிரிகளின் மத்தியில் பந்தியை ஆயத்தப்படுத்துகிறவரும் அவரே. சக ஊழியர்களுடைய ஊழியத்தைக் கனப்படுத்தி அவரது ஊழியமும் மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற விருப்பமுள்ளவராயிருக்கவேண்டும். ஊழியரிடையே சரியான தொடர்புகள் இருக்க வேண்டும்.மக்களை விசுவாசத்தில் வேரூன்ற அன்பின் அடிப்படையில் உற்சாகப்படுத்துவதே ஊழியக்காரரின் பொறுப்பு. ஊழியர்களுக்கு உதவுகிறவர்களையும் இனம் கண்டு அவர்கள் எடுக்கும் பிரயாசத்தை உற்சாகப்படுத்த வேண்டும். தன்னார்வ தொண்டர்களும் ஊழியங்களும் ஊழிய எல்லையில் பெருக வழி வகுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி ஒருவரிலொருவர் ஆரோக்கியமும் உற்சாகமும் பெற்றுக்கொள்ளுதல் அவசியம். ஒருவரையொருவர் வாழ்த்துவதும் கிருபைக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தலும் ஊழிய எல்லையில் முக்கியம் பெற வேண்டும்.

உயிர்த்தெழுதலின் நம்பிக்கையும் வாழ்க்கையில் உயிர்ப்பிப்பும்

கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். 1கொரிந்தியர் 15: 17
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! இச்செய்தி நாமும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை தந்தது . நிகழ் கால வாழ்வில் பாவத்தினின்று விடுதலை பெற்று உயிர்ப்பிக்கப்பட்ட புது வாழ்வு பெற்றோம். சுவிசேசம் நமக்கு அறிவிக்கப்பட்டது. அதைப் பெற்று கற்று அதிலே நிலைத்திருக்கிறோம் . இது ஒரு தத்துவம் அல்ல.இது மறை நூலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மை. வேதவாக்கியங்களின் படி கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். புரட்டிப் போட்ட கல்லறையின் கல் சாட்சி. தேவதூதரின் காட்சியும் சாட்சியும் ஆதாரங்கள். தேவனுடைய வல்லமையை , கண்டவர்கள், கேட்டவர்கள், தொட்டவர்கள் அறிந்து எழுதி வைத்த அனுபவமே நற்செய்தி. எங்களைத் தொட்டார், எங்களிடத்தில் தோன்றினாரென மாறி மாறி அனுபவம் சொன்ன அப்போஸ்தலர்கள் தனி நபர்கள் மக்கள் கூட்டம் இத்தனையும் சுவிசேச பகுதியாக அப்போஸ்தல வரலாறாக எழுதப்பட்டது. இந்த உயிர்ப்பிப்பை நம்பி ஏற்றுக்கொண்டு காணாமல் விசுவாசித்து வாழ்க்கையில் மாற்றம் பெற்றோம். மறுவாழ்வுக்கும் உயிர்த்தெழும் நம்பிக்கைக்கும் காத்திருக்கிறோம். இந்த ஆற்றல் நம்முள் உருவாகியுள்ளது. தேவனுக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லுகிறவர்களாக அல்ல. தேவன் எழுப்பின கிறிஸ்து எங்களையும் எழுப்புவாரென அஸ்திபார நம்பிக்கை சார்ந்த விசுவாச அனுபவம் கொண்டவர்கள் நம்மிடத்தில் இந்த நங்கூர நம்பிக்கையை நமக்கு சுவிசேசமாக அறிவித்திருக்கிறார்கள். ஆகவே , இந்த மாற்றம். வாழ்வில் மாற்றம், சபையில் மாற்றம் உலகெங்கும் மாற்றம் இதன் வேர் தேவன் எழுப்பிய கிறிஸ்து இயேசு ! அவர் அருளிய பரிசுத்த ஆவியானவர். தூய ஆவியானவர் நம்மோடு நீ தேவனுடைய பிள்ளையென சாட்சி கூறும் சத்திய அனுபவம். இது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் தொடர்ந்து கால காலமாக கை மாறி வந்த வல்லமையின் விளைவு. இவ்வாழ்வுக்காக மட்டுமல்ல மறு உலக வாழ்வுக்காகவும் காத்திருக்கும் வல்லமை நம்முள் இன்று ஏற்றுக்கொண்ட சுவிசேசத்தின் பெலன். உயிர்த்தவர் இவ்வுலக வாழ்வுக்கு உயிர்ப்பு தந்தார். அவ்வுலக வாழ்வுக்கு மரணத்துக்கு பிறகு நம்மை உயிர்த்தெழப்பண்ணுவார். ஆமென்.
நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

கூடி வாழும் சபையிலே அவரவருக்குப் பொறுப்புண்டு அந்தந்தப் பொறுப்பை அவரவருக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டுசெயல்பட்டு தேவ நோக்கத்தை சபையில் வெளிக்கொணரs வேண்டும். இப்படி கூட்டுப்பொறுப்பில் இணைந்து தேவ பெலத்தோடு பொது வாழ்வின் பொறுப்பை அர்த்தமுள்ளதாக்கவேண்டும். இதைக் கண்டு உலக மக்கள் பயன் பெற்று தேவனிடத்தில் வந்தடையவேண்டும். சபையார் தனதுபொறுப்பை செய்து எதிர்கால மகிமைக்கென்று தம்மைக் காத்துக்கொண்டு பரிகரிக்கவேண்டிய கடைசி சத்துருவாகிய மரணத்தை வென்று உயிர்த்தெழுதலின் பங்குள்ளவர்களாகி பரம பாக்கியம் பெற வேண்டும். முடிவோ நித்திய ஜீவன். கிறிஸ்துவோடு கிறிஸ்துவின் சபை என்றும் வாழும். ஆமென்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.