சபையின் பொறுப்பும் எதிர்காலமும்மாதிரி

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

3 ல் 3 நாள்

அழிவுள்ளாதாய் விதைக்கப்படும் அழியாமையை தரித்துக்கொள்ளும்

அழிவுள்ளாதாய் விதைக்கப்படும் அழியாமையை தரித்துக்கொள்ளும்
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.1கொரிந்தியர் 15: 42

பரிகரிக்கப்படவேண்டிய கடைசி சத்துரு மரணம். வந்தவர் எவரும் இந்த பூமியில் தங்குவதில்லை. பிறப்பதும் மரிப்பதும் தீர்ப்பு பெறுவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜென்ம சரீரம் நல்லடக்கம் செய்யப்படும். சரீர உயிர்த்தெழுதல் உண்டென்று விசுவாசித்து சரீரத்தை கனப்படுத்தி திருச்சபையார் சுற்றி நின்று நம்பிக்கையின் வார்த்தைகளை வாசித்து பாடல் பாடி மறு உலக வாழ்வுக்கு அனுப்பி வைப்பார்கள். கொண்டு வந்ததொன்றுமில்லை கொண்டு செல்லுவதொன்றுமில்லை என்பதற்கு ஆதாரமாக அந்த சவப்பெட்டி முன் நல் வார்த்தைகள் கூறி கை தட்டி கைகூப்பி அனுப்பி வைப்பார்கள். ஜென்ம சரீரம் விதைக்கப்படும். இச்சரீரத்தை புதைக்கவில்லை விதைக்கிறோமென நம்பிக்கையின் வார்த்தையை ஊழியரும் பலர் முன் சொல்லி அனுப்புவார். இந்த விசுவாச வார்த்தைகளெல்லாம் உறுதியான ஆறுதலான மொழிகளெல்லாம் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின் வந்தவை. சுவிசேசத்தின் விளைவு இவை. மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. கிறிஸ்து இயேசுவே உயிர்த்தெழுதலின் முதற் பலனானார்.ஜென்ம சரீரமே முந்தினது அது இந்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு பிந்தி பெறப்போகிற ஆவிக்குரிய சரீரத்துக்காக அந்த மகிமையின் உயிர்த்தெழுதலுக்காக மகிமை பிரவேசம் செய்கிறது, முந்திய ஆதாமுக்குள் ஜீவாத்துமா பெற்ற நாம் பிந்திய ஆதாமாகிய கிறிஸ்து இயேசுவினால் உயிர் வாழ்வு கொடுக்கும் ஆவி பெற்று ஆவிக்குரிய சரீரம் அணிந்து கொள்ள வாஞ்சித்து கல்லறைக்குள் பத்திரப்படுத்தப்படுகிறோம். அவர் வரும் நாளிலே உயிர்த்தெழும் நாளிலே இமைப்பொழுதில் மறு ரூபம் பெறுவோம். இத்தனை மகிமையான சுவிசேசம் பிரசங்கிக்கப்படாவிட்டால் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை கிடைத்திருக்காது. சுவிசேசத்தை பெற்ற நம்முடைய பொறுப்பு என்ன ?

கண்ணிமைப்பொழுதில் நடப்பது என்ன? (வானத்தில் வானத்தில் நடு வானத்தில்)
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்: நாமும் மறுருபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15 :52
மாம்சமும் இரத்தமும் தேவனுடைய பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை. மரணம் நிசப்தமாய் இருக்கும் ஒரு நிலை. குழிக்குள் இறங்குதலுக்கு ஒப்பாயிருக்கும். பரதேஸ் எனலாம். ஆனால் கண்ணிமைக்கும் வேளையில் எக்காளம் தொனிக்கும். ஆரவார தொனி பிறக்கும் . பரலோக மேனி பெற வாய்ப்பின் நேரமிது. மரித்தவர் அழிவிற்குரியவர், அழியாமையை தரித்துக்கொள்ள எழுப்பப்பட்டு, மறு ரூபம் பெறுவர். மரணம் ஜெயமாக விழுங்கப்படும். இயேசுகிறிஸ்துவினாலே ஜெயங்கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்ற வசனங்கள் நிறைவேறும் காலமது. வேத வாக்கியங்களின்படி உயிரோடு எழுந்தவர் இவ்வேத வசனங்களை நம் மறு வாழ்வில் மறு ரூப அனுபவ மூலம் நிறைவேற்றுவார். மரணத்தின் கூரை முறித்து பாதாளத்தை ஜெயமாக விழுங்கும் நாள் அது. வேத வசனங்களை அனுப்பி இவ்வாழ்வில் நம்மை இரட்சிக்கிறவர் வேத வசனங்கள் நிறைவேற நம்மை மறு உலகில் உயிர்பிப்பார். ஆவிக்குரிய சரீரம் அவரோடு மகிமையில் என்றென்றும் வாழ அவர் தரும் பரலோக மேனி அருளப்படும். ஆகவே இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ள நீங்கள் கொடுக்கப்பட்ட தற்கால பொறுப்புகளில் பிற்கால நம்பிக்கைக்கென உறுதியோடு நம்பிக்கையிழக்காவண்ணம் வாழுங்கள், நிலைத்திருங்கள். பெலன் பெறுவீர். அசையாத ராஜ்ஜியத்திற்குரியவர்களே அசைவு பெறாமல் வாழுங்கள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

கூடி வாழும் சபையிலே அவரவருக்குப் பொறுப்புண்டு அந்தந்தப் பொறுப்பை அவரவருக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டுசெயல்பட்டு தேவ நோக்கத்தை சபையில் வெளிக்கொணரs வேண்டும். இப்படி கூட்டுப்பொறுப்பில் இணைந்து தேவ பெலத்தோடு பொது வாழ்வின் பொறுப்பை அர்த்தமுள்ளதாக்கவேண்டும். இதைக் கண்டு உலக மக்கள் பயன் பெற்று தேவனிடத்தில் வந்தடையவேண்டும். சபையார் தனதுபொறுப்பை செய்து எதிர்கால மகிமைக்கென்று தம்மைக் காத்துக்கொண்டு பரிகரிக்கவேண்டிய கடைசி சத்துருவாகிய மரணத்தை வென்று உயிர்த்தெழுதலின் பங்குள்ளவர்களாகி பரம பாக்கியம் பெற வேண்டும். முடிவோ நித்திய ஜீவன். கிறிஸ்துவோடு கிறிஸ்துவின் சபை என்றும் வாழும். ஆமென்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.