கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வுமாதிரி

கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வு

3 ல் 3 நாள்

ஊழியம்

பரிசுத்தவான்களுக்கு ஊழியம்

இந்த தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும். 2 கொரிந்தியர் 9 12
பரிசுத்தவான்கள் தேவைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் ஊழியங்கள் நிறுவி நிர்வகித்து செயல்படுத்துவது வேதாகம அடிப்படை உண்மை. பரிசுத்தவான்களென ஒரு குறிப்பிட்ட மக்களை அழைப்பதோடு நின்று விடாமல் அவர்களது குறைச்சலில் அவர்களுக்கு உதவுவது அவசியம். அவர்களது தேவைகளை சந்திப்பதின் மூலம் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துகிறோம். உங்களின் கீழ்ப்படிதல், சுவிசேஷத்தின் அறிக்கைக்கு நீங்கள் செய்யும் உபகாரம். அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் மூலம் அவர்கள் உங்களுக்கு செய்யும் ஜெபமும் கடவுளுடைய அதிகக் கிருபைகளை உங்களுக்குள் வரவழைக்கும். பவுல் இந்த ஊழியத்தைக் குறித்து விவரிக்கும்போது அவரது உள்ளம் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு உதவும் மற்றவர்களுடைய மனவிருப்பத்தையும், வைராக்கியத்தையும் பாராட்டுகிறார். இந்தக் கனமான ஊழியத்துக்கு முன் ஆயத்தமும் தாராளமான மனப்பான்மையும் அவசியம். இந்த ஊழியம் கட்டாயத்தினால் அல்ல. மனதில் ஏவப்பட்டு செய்யப்பட வேண்டிய ஒன்று. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான். பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன்பிரியமாய் இருக்கிறார். இவ்வூழியம் செய்வதன் மூலம் நற்கிரியைகளில் பெருகுகிறோம். நீதியாகவும் கருதப்படுகிறது. கனி கொடுக்கும் ஊழியமாகவும் பெருக்கத்துக்கு காரணமாகவும் அமைகிறது. பரிசுத்தவான்களின் குறைச்சலில் உதவுவோம். இக்காலத்திலே சுவிசேஷம் பெற்று ஆண்டவருக்கு சாட்சியாக நிற்கும் முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் அநேக இடங்களில் கஷ்டங்கள் மத்தியில் தேவைகளோடு வாழ்கிறார்கள். உதவ வேண்டியது நமது பொறுப்பு விதை விதைத்தோம் ஏற்ற காலத்தில் அறுவடை கண்டோம். தொடர்ந்து அவர்களைப் பாதுகாக்கவேண்டியது அவர்களது பொருளாதார நிலையில் உதவ வேண்டியது நமது பொறுப்பு. அவர்களை விசாரிப்போம் உதவுவோம்.



வல்லமையின் ஊழியம் --- வல்லமை தேவை தேவா, வல்லமை தாரும் தேவா
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பெலமுள்ளவைகளாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 10: 4

ஆவிக்குரிய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற நமக்கு ஆவிக்குரிய போராயுதங்கள் உண்டு. இது தேவன் தந்த ஊழியம். அரண்களை நிர்மூலமாக்கும். வல்லமையுள்ள போராயுதத்தைக் கொண்ட நாம் யுத்தம் கர்த்தருடையதென அறிக்கையிட்டு பிசாசுக்கும் பாவத்துக்கும் உலகத்துக்கும் எதிராக போராடுகிறோம். கர்த்தரை அறிகிற அறிவுக்கு எதிராக வருகிற எந்த விவாதங்களையும், சர்ச்சைகளையும் ,தத்துவங்களையும், மாயையும் வென்று அவைகளை கடவுளுக்குள் சிறைப்படுத்தி, அவருக்கு கீழ்ப்படிகிறவர்களாக மாற்றும் வல்லமையின் ஊழியத்தை பெற்றிருக்கிறோம். கீழ்ப்படியாமைகளெல்லாம் தண்டிக்கப்படுகின்றன. இந்த நம்பிக்கையிலே உறுதியாக இருக்கிறோம். இது நமது உள்ளான மனிதனிலே ஏற்படுகின்ற ஒன்று. கடவுள் நம்முள் தந்திருக்கின்ற ஒன்று. கற்றுக்கொடுத்து முன்னேற்றுவிக்கிற அதிகாரத்தோடு,, அறியாமைகளிலிருந்து மக்களை விடுவிக்கிறோம். நேரடியாகவும், தொடர்பு ஏதுக்கள் மூலமாகவும் , கண்டித்து உணர்த்தியும், இந்த பணிவிடை செய்கிறோம். இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற நாமும் சொல்லாலும் , செயலாலும் இந்த வல்லமையின் ஊழியத்தில் கடவுள் தந்த அளவிலே இதை செய்கிறோம். எங்களை மெச்சிக்கொள்ளத்தக்க மிகுதியாக எங்களை பிரகடனப்படுத்துவதில்லை. அப்பிரயோஜனமான ஊழியக்காரரென அறிக்கையிடவும் தயங்குவதில்லை. வல்லமை கர்த்தருடையது. ஊழியம் அவருடையது. அவரே நம்மை நம்பி இந்த கனமான ஊழியத்துக்கு நியமித்துமிருக்கிறார். இன்னும் அறியப்படாத பகுதிகளுக்கு அறிவிப்பதே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களுடைய களத்தில் ஆதாயம் தேடும் ஊழியமல்ல இது. கடவுளால் அங்கீகாரம் பெற வேண்டி இந்த ஊழியத்தில் சொல்லப்படாத இடங்களை தேடி செல்ல அர்ப்பணிக்க விரும்பும் வல்லமையின் ஊழியம் இது. ஆமென்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வு

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வு காணமுடியாத கடவுளை கிறிஸ்து இயேசுவுக்குள் கண்டோம். நண்பராகக் கண்டோம். நம்மை ஆலயமாக்கிக் கொண்டார். பரிசுத்தம் தந்தார். அவர் தம்மையே மனுக்குலத்துக்கு தந்ததினால் ஈகை இன்னதென்று அறிய வைத்தார். நம்மையும் பிறருக்காக வாழ பயிற்றுவிக்கிறார். அவரால் அன்பு கூறப்பட்டவருக்கு நாமும் கடனாளிகளானோம். பொதுவான சேவை செய்யவும் குறிப்பானவர்களுக்கு ஊழியம் செய்யவும் நம்மை தெரிந்து கொண்டார். இந்த பிரயோஜனமான ஊழியத்துக்கு நம்மை தகுதியுள்ளவராக்குகிறவர் அவரே. அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பினால் ஊழியத்தில் நம்மையும் வல்லமை படுத்தினார். கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக. அவர் தந்த இந்த வாழ்வு பூமியிலே பரலோக வாழ்வு. முடிவோ நித்திய வாழ்வு. கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் என்றும் வாழும் வாழ்வு ஆமென்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.