நான் புறம்பே தள்ளுவதில்லைமாதிரி

என்னிடத்தில் வருகிறவனைத் தள்ளுவதில்லை
ஒருமுறை இயேசு பாவிகளோடு பந்தியிருந்ததைக் குறித்து பரிசேயர் கூட்டத்தார் தர்க்கித்தபோது, தான் பாவிகளையே இரட்சிக்க வந்தேனென்று இயேசுவானவர் தீர்க்கமாகக் கூறினார்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பாவியாகவோ, நீதிமானாகவோ எப்படி இருந்தாலும், உங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்து எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்.
ஒரு விசை தன்மகனுக்காக வேண்டிக்கொள்ள வந்தவனிடம் [மாற்கு 9:23] நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும் என்றார். அதாவது, என்னிடத்தில் வருகிறபோது, 'விசுவாசத்தோடு மட்டும் வந்தால் போதும்' என்கிறார்.
அந்த பிள்ளையின் தகப்பன், தன் ஜனங்களால் சோர்ந்து போயிருந்தான். குடும்பத்திலும் சமாதானமில்லை, அதுமட்டுமல்லாது சீஷர்களாலும் உடைந்து விட்டான். அதனால், இயேசுவால் சுகமாக்க கூடுமோ, கூடாதோ என்று நடுங்கினான்.
ஒரு காரியத்தை நன்றாய் கவனியுங்கள். இயேசுவிடம் செல்லும் போது மட்டும் எதைக் குறித்தும் சிந்தியாமல், எவரைக் குறித்தும் யோசியாமல் இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்த்து செல்லுங்கள், வெற்றி அடைவீர்கள்.
ஏனென்றால், இயேசுவானவர் மட்டுமே தன்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை. தன் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்த கெட்டக் குமாரனை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தவர். உங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. அவரையே மீண்டும் நம்பி செல்லுங்கள். உங்களை அனைவர் மத்தியிலும் மீண்டெடுப்பார். ஆமென்..
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவானவர் மட்டுமே தன்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை. தன் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்த கெட்டக் குமாரனை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தவர். உங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. அவரையே மீண்டும் நம்பி செல்லுங்கள். உங்களை அனைவர் மத்தியிலும் மீண்டெடுப்பார்...
More
இந்த திட்டத்தை வழங்கிய கடவுளின் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/kog.vlog
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

மன்னிப்பு என்பது ...

இளைப்பாறுதலைக் காணுதல்

தனிமையும் அமைதியும்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
