இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்மாதிரி
நெம்புகோல் ஜெபத்தைக் கற்றுக் கொள்ளுதல்
அறிவியலில் ஒரு பெரிய பொருளை நகர்த்துவதற்காக நெம்புகோல் என்னும் கம்பியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும் என்று படித்திருக்கிறோம். இதன் மூலம் அதிக ஆற்றலை செலவிடாமல் எளிதாக பொருட்களை நகர்த்திவிடலாம். சீசா பலகையை அல்லது கீலில் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு கதவை நினைத்துப் பாருங்கள். அவைகளுக்கு என்று ஒரு இணைப்புப் புள்ளி இருப்பதால் நாம் தினசரி வாழ்க்கையில் காணும் இந்தப் பொருட்கள் எளிதாகவும் மென்மையாகவும் அசையவும் இயங்கவும் முடிகிறது. அசைவது மிகக் குறைவான ஆற்றலில் நடைபெற இந்த நெம்புகோல் புள்ளி உதவுகிறது. நெம்புகோல் ஜெபமும் இதையே செய்கிறது. ஆன்மீகச் சூழலை மாற்றி, கர்த்தரின் சித்தம் என்ன என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. இப்படிப்பட்ட ஜெபங்களே கர்த்தரை மகிமைப்படுத்துகிறதாகவும், அவரது ராஜ்யத்துக்கு நன்மைகளைக் கொண்டு வருகின்றவைகளாக இருக்கும். எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத்தாரும் என்று இயேசுவிடம் சீடர்கள் கேட்ட போது, “கர்த்தருடைய ஜெபம்” என்று நாம் அறிந்திருக்கிற ஜெபத்தைக் கற்றுக் கொடுத்தார். இந்த ஜெபமானது சுருக்கமானதும் இனிமையானதுமாக இருக்கிறது. ஆனால் இதில் எல்லாமே அடங்கியிருக்கிறது. இப்படித் தான் நெம்புகோல் ஜெபமும் இருக்கும். டிம் எல்மோர் அவர்கள் நெம்புகோல் ஜெபம் என்பதை இவ்வாறாக விளக்குகிறார்: “மேலான நிலையில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்; இவை பரமாரிப்புக்கான ஜெபங்கள் அல்ல, செயல் சார்ந்த ஜெபங்கள் என்கிறார்.
கர்த்தருடைய ஜெபத்தை நாம் ஆராய்ந்தால், நெம்புகோல் ஜெபமானது இதில் மறைந்திருப்பதை சாதாரணமாகவே கண்டு கொள்ளலாம். இது கர்த்தரை தகப்பன் என்று சொல்லி அவரது பெயருக்கு புகழைக் கொண்டு வருவதில் துவங்குகிறது. கர்த்தருடைய ராஜ்யம் இந்த உலகத்தில் வரவேண்டும் என்று இயேசு பிதாவிடம் வேண்டுகிறதில் இது தொடருகிறது. அந்த நாளுக்கான தேவைகளைத் தர வேண்டும் என்று கேட்கிறது. பின்னர் ஜெபிக்கிறவருக்கு மன்னிப்பு வேண்டும் என்று கேட்கிறது. அத்துடன் நின்றுவிடாமல் பெற்றுக் கொண்ட மன்னிப்பை பிறருக்குக் காட்ட வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. நாம் இதை மறந்திருக்கலாம் ஆனால் தீமையில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்படியாகச் சொல்லி இந்த ஜெபம் முடிவடைகிறது.
இப்படிப்பட்ட ஜெபமானது நம்மில் இருந்து கர்த்தரின் ராஜ்யத்தின் மீது கவனத்தைத் திருப்புகிறது. நமக்காக ஜெபிப்பது தவறல்ல. நமக்காக ஜெபிக்க வேண்டும் என்பது முக்கியமானது. நாம் நமக்காக ஜெபிக்காமல் நித்தியமான கண்ணோட்டத்துக்காக ஜெபித்தால் அது எத்தனை சிறப்பாக இருக்கும்? கர்த்தரின் ராஜ்யம் நம் வாழ்க்கைகளில் ஊடுறுவி அதன் மூலம் பலர் மீட்பை அடைய வேண்டும் என்பதைக் கேட்கும் ஜெபங்களாக நம் ஜெபங்கள் மாறினால் எப்படி இருக்கும்?
இது நம் வாழ்க்கைகளை மறுமலர்ச்சியடையச் செய்து இந்த உலகத்தில் கர்த்தரின் மாபெரும் பணி நடப்பதற்கான மாபெரும் வாய்க்கால்களாக மாற்றிவிட முடியும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிறோம். நீங்கள் நேரம் எடுத்து கர்த்தருடன் பேசவும் உங்களுக்கான அவரது சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் உங்கள் வாழ்வை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும் இந்த வேதபாடத்திட்டம் உங்களுக்கு உதவும். நிகழ்ச்சிகள் நடக்கும் வரை நீங்கள் ஜெபிக்கவும் உற்சாகப்படுத்தப் போகின்றது.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan