இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்மாதிரி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 ல் 4 நாள்

தீர்க்கதரிசனமாக ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

ஜெபங்கள் தீர்க்கதரிசன அறிக்கைகளாக இருக்கின்றன. அப்படித்தான் அவைகள் இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, அடிக்கடி நமது ஜெபங்கள் பிடிவாதம் பிடிக்கும் சிறுபிள்ளைத்தனமாக, சுய பரிதாபத்தால் நிறைந்தவைகளாக இருக்கின்றன. நாம் ஜெபத்தில் குறை சொல்கிறோம், முறுமுறுக்கிறோம், கோபத்தில் கத்துகிறோம். கிருபாசனத்தண்டையில் நாம் வர முடியும் என்பதால் இவற்றை எல்லாம் ஜெபத்தில் செய்யலாம் தான். ஆனால் அங்கேயே இருந்துவிட முடியாது. நாம் தூசியைத் தட்டிவிட்டு எழுந்து நிற்கும் நேரம் ஒன்று இருக்கிறது. நமக்குக் கர்த்தர் என்ன வைத்திருக்கிறார் என்பதை தீர்க்கமாகச் சொல்ல வேண்டியதிருக்கிறது. நடக்காமல் போனவற்றையும், மோசமாகப் போனவற்றையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

தீர்க்கதரிசனம் என்பது பின்னர் நடக்கப் போகின்றவற்றைச் சொல்வதல்ல. தீர்க்கமாக எடுத்துச் சொல்லுதல் ஆகும். அதாவது நம் மீதும் நம் சூழ்நிலை மீதும் கர்த்தர் வைத்திருப்பவை என்ன என்பதை வேதாகமத்தின் உதவியால் தீர்க்கமாகச் சொல்வது ஆகும். தீர்க்கதரிசனம் என்பது விசுவாசக் கண்களைப் பயன்படுத்துவது ஆகும். அது காண முடியாதவைகளைக் காண்கிறது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு சந்திப்புக்கும் மேலாகக் கர்த்தரின் வார்த்தையை அறிக்கை செய்வது ஆகும். 

இப்படிப்பட்ட ஜெபங்கள் நமது இதயங்களுக்குள் கர்த்தரின் வார்த்தைகள் வைத்து வைக்கப்பட்டிருக்கும் போது தான் செய்யப்பட முடியும். அப்போது தான் அவை நம் உணர்ச்சிகளைச் சாராமல் தீர்க்கதரிசனமாக இருக்கும். வேதாகமத்தை நாம் வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் துவங்கும் போது, அவற்றை நமது ஒவ்வொரு நாள் சூழ்நிலைகளுக்கும் சுதந்திரமாக்கி ஜெபிக்கத் துவங்கலாம். இந்த ஜெபங்கள் வல்லமையுள்ளவைகள் ஏனென்றால் அவை ஆன்மீக சூழ்நிலைகளுக்குள் பேசப்பட்டு, விசுவாச சூழ்நிலையை உருவாக்கக்கூடியவைகள். 

விசுவாச ஜெபங்கள் நம் வாழ்வுக்கான வரைபடத்தை உருவாக்குகின்றன. ஏனென்றால் அவை நம்மை எதிர்பார்ப்புடனான கர்த்தர் மீதான காத்திருத்தலுக்கு வடிவமைக்கின்றன. அவரது ராஜ்யம் உலகத்தில் வருவதைக் காணச் செய்கின்றன. இவை நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் நம் வாழ்வில் செயல்படவும் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரவும் அனுமதிக்கிறது. 


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிறோம். நீங்கள் நேரம் எடுத்து கர்த்தருடன் பேசவும் உங்களுக்கான அவரது சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் உங்கள் வாழ்வை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும் இந்த வேதபாடத்திட்டம் உங்களுக்கு உதவும். நிகழ்ச்சிகள் நடக்கும் வரை நீங்கள் ஜெபிக்கவும் உற்சாகப்படுத்தப் போகின்றது.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan