வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

7 ல் 3 நாள்

நம்குணம்சோதிக்கப்படுதல்

எந்தவகையானகல்வியையும்பெற்றுக்கொள்ளும்ஒவ்வொருவரும்பரீட்சை அல்லது சோதனையின் முக்கியத்துவத்தை அறிவார்கள். ஒரு மாணவரின் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சியைக் காட்டுவதற்காகவே தேர்வு அல்லது பரீட்சை வைக்கப்படுகிறது. அந்த மாணவர் அடுத்த நிலைக் கல்விக்குச் செல்ல ஆயத்தமாக இருக்கிறாரா என்பதையும் இது தீர்மானிக்கிறது. ஆன்மிகத்தில், வனாந்தரம் என்பது நமது பயணத்தில் அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு ஆயத்தப்படுத்தப்படுவதற்காக நாம் சோதிக்கப்படும் ஒரு வழியாகும். நமது குணம் தான் நாம் சோதிக்கப்படும் முதன்மையான பகுதியாகும். யாரும் நம்முடன் இல்லாதபோது தனிமையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதுவே நமது குணம் ஆகும். இது வெளியே தெரியாமல் நமது வெளிப்புற ஆள்த்தனையையும் இறுதியில் நம் முழு ஆள்த்தன்மையையும் உருவாக்கும் ஒரு அம்சமாகும். ஒருவர்வெற்றிகரமானவராக இருக்கலாம், திறமையானவராகவோ, கவர்ச்சிகரமானவராகவோ இருக்கலாம். ஆனால் அவரது குணத்தில் ஓட்டைகள் இருக்கும் என்றால் மற்ற எதுவும் பயனற்றதாகப் போய்விடும். நாம்ஒவ்வொருவரும்குறைகள்உள்ளவர்களே. நம் அனைவரின் குணங்களிலும் குறைகள் இருக்கின்றன. ஆகவே இயேசுவைப் பின்பற்றுதல் மூலம் அவர் நமக்கு சுகமாகுதலைத் தந்து நமது தனிப்பட்ட, ஆள்த்தன்மையின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவருகிறார் என்று சொல்லப்படுவதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்தமாற்றமானதுகர்த்தருடனானநம்நடையில்நாம் வளரும்போது மற்றவர்களுக்குத் தெரியும்.

நமதுகுணங்களைவடிவமைக்கும்சுவாரசியமான வழியை வனாந்தரமானது கொண்டிருக்கிறது. நீண்டகாத்திருக்குதல்கள், இழப்புகள்மற்றும்வெறுமையின்கடினமானசூழ்நிலைகள் நமது இதயங்களை சோதிக்கும் ஒரு வழியைக் கொண்டிருக்கின்றன, அதன் மூலம் நமது குணத்தையும் சோதிக்கின்றன. நாம்சிந்திப்பவைகள்,சொல்பவைகள்,செய்பவைகள்அனைத்துமேநாம்உள்ளேஆழத்தில்எப்படிஇருக்கிறோம்என்பதுடன்நேரடியாகத்தொடர்புகொண்டவைகளாகும்.நமதுஉள்ளானமனிதனை தோலுறித்துக்காட்டும் விசித்திரமான வழியை வனாந்தரமானது கொண்டிருக்கிறது. உண்மையில் உள்ளே நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ள உதவுகிறது.

தாவீதுஅரசன்,தனதுசங்கீதங்கள் பலவற்றில் தனது உணர்ச்சிகளையும் தனது குறையான குணத்தையும் பயமுறுத்தும் அளவுக்கு நேர்மையாக எழுதியிருக்கிறார். இந்த அறிக்கைகளில் இருக்கும் வல்லமையான அம்சம் என்பது தனது பலகீனமான பிரச்சனைகளை ஒப்புக் கொண்டார். தன்னை மாற்றுவதற்கு கர்த்தர் வல்லமை உள்ளவர் என்றும் எதுவும் அவரை விட்டு விலக்க முடியாத அளவுக்கு அவரது அன்பு நிலையானது என்றும் அறிக்கையிட்டார்.

நாமும்நம்மைக்கூர்மையாகப்பார்த்துஒருதனிப்பட்டகுணம்பற்றியசோதனையைச்செய்தால் என்ன? நாம் எதைக் கண்டுபிடிப்போம்? நாம் கர்த்தரின் முன் சுத்தமாக வந்து நிற்போமா?

செய்யவேண்டியவை:

இந்த வனாந்தர காலத்தில் நீங்கள் கவனித்த, “நான்_______ ஆகஇருக்கிறேன்” என்று துவங்கி எதிர்மறையாக முடியும் குணங்களைப் பற்றிய அறிக்கைகளின் பட்டியல் ஒன்றை உருவாக்குங்கள். உங்களை அவமானப்படுத்தவோ, குற்ற உணர்ச்சியைத் தூண்டவோ அல்ல, உங்களது இந்தப் பகுதிகளை இயேசுவின் சுகமாக்கும் பாதுகாப்பான கரங்களுக்கு வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஜெபம்:

நித்தியகர்த்தாவே,

நான்…………………….. ஆக இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். என்பாவசுபாவத்தைஉம்மிடம்அறிக்கைசெய்கிறேன்.என்காயங்களைசுகப்படுத்தும்,என்குற்றத்தைசுத்தமாகதுடைத்துவிடும்.மீண்டும்உமக்குமுன்பாகசுத்தமானஇதயத்துடன்நிற்கஉதவிசெய்யும்.என்ஜெபத்தைக் கேட்டதற்காக உமக்கு நன்றி.

உம்மகனாகியஇயேசுவின்பெயரால்ஜெபிக்கிறேன்,

ஆமென்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/