வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

7 ல் 6 நாள்

பொறுமையைக்கட்டிஎழுப்புவதில்பயிற்சி

பயிற்சியின்மற்றும்ஒருநோக்கமானதுபொறுமையையும்சகிப்புத்தன்மையையும்கட்டிஎழுப்புவதுஆகும்.பயிற்சிகாலத்தில்மட்டுமல்ல,எதிர்காலத்தில்அவர்கள்பங்கேற்கப்போகும்அனைத்துப்போட்டிகளிலும்அவர்களதுஉடல்பங்கேற்கும்அளவுக்குஅவர்களதுஉடல்சகிப்புத்தன்மையைப் பெற வேண்டும் என்பதற்காகவே பயிற்சியாளர்களால் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

கிறிஸ்துவைப்பின்பற்றுகிறவர்களாகநாமும்இப்படித்தான்இருக்கிறோம்.வனாந்தரக்காலமானது தற்காலத்துக்குமட்டுமல்ல,நீண்டகாலத்துக்குநம்மைஆயத்தப்படுத்துகிறது.வளர்ச்சியின்அடுத்தகாலத்துக்கு நம்மை பயிற்சி கொடுத்து நமக்குள் சகிப்புத் தன்மையை வளர்க்கிறது. இது முதிர்ச்சியில்லாத ஒரு அம்சம் போலத் தோன்றலாம். ஏனென்றால் வனாந்தரத்தில் இருக்கும்போது நாம் ஒவ்வொருநாளும் நமக்கு இருக்கும் போராட்டங்களிலேயே சிக்கிக் கொண்டு நீண்ட கால தரிசனத்தைக் காண மறந்து போய்விடுவோம். வனாந்தரகாலம் நீண்டதாக இருப்பது இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட காலத்துக்கான தனது பணியைக் கர்த்தர் நமக்குள் நிறைவேற்றியபின்னர், அவர் நம்மை அடுத்த காலத்துக்குள் எளிதாக நுழையச் செய்கிறார். இதன் மூலமாக நாம் அடுத்த பயணங்களில் பொறுமையுள்ளவர்களாகவும் முன்னேறுகிறவர்களாகவும் இருக்க நமக்குள் உறுதியைத் தருகிறார். வனாந்தரம் அதை நமக்குத் தருகிறது.

நித்தியகாலம்போலத் தோன்றுகிற நீண்ட காலம் காத்திருக்கும்போது உறுதியான ஒரு விசுவாசத்தை நீங்கள் வளர்க்கிறீர்கள். கர்த்தர் எதையோ செய்யப் போகிறார் என்று உங்களுக்குள் உள்ளுணர்வு இருப்பதால் இந்த விசுவாசம் எளிதில் எதையும் கைவிட்டுவிடுவதில்லை. நீங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக உணரும்போது, நீங்கள் மேலே நோக்கிப் பார்க்கிறீர்கள். ஏனென்றால் வேறு எந்த சாத்தியமான வாய்ப்பையும் நீங்கள் காணவில்லை. உங்கள் சூழ்நிலையை விவரிக்க சொற்களே இல்லை என்று நினைக்கும்போது நீங்கள் உங்கள் சத்தத்தால் துதிக்கத் துவங்குகிறீர்கள். உங்கள் உள்ளான மனிதனை கடினமான சூழ்நிலைகள் எவ்வாறாக செதுக்குகின்றன என்பதை நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள்பரபரப்புடன்காத்திருப்பதில்லை, அல்லதுஉங்களைக்குறித்தேசுயபரிதாபத்துடன்இருப்பதில்லை. மாறாகஒவ்வொருநாளும்வரும்போதுஅதைஇருக்கும் வகையிலேயே ஏற்றுக் கொள்கிறீர்கள். உங்கள்நடையில், உதட்டில் பாடலும் இதயத்தில் நம்பிக்கையுமாகச் செல்கிறீர்கள். புயலும் மேகமும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் கூட கர்த்தர் உங்கள் பாதையில் தூவியிருக்கும் சிறு சிறு அற்புதங்களுக்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க கற்றுக் கொள்கிறீர்கள். உறுதியற்ற சூழ்நிலைகளிலும் கூட நீங்கள் மகிழ்ச்சியுடன்அமைதியாகஇருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் கர்த்தர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.

இந்தகாலத்தில்கட்டிஎழுப்பப்பட்டஉறுதியானது நீங்கள் இயேசுவைப் பின்பற்றும்போது உங்கள் வாழ்க்கையின் மீதமான காலமெல்லாம் நடத்திச் செல்லும். வாழ்க்கை எளிதானதாக இருக்காது. ஆனால் அது திருப்தியுள்ளதாக இருக்கும். ஏனென்றால் காத்திருக்கும் விசுவாசமானது எதிர்ப்பு என்னும் மண்ணில் வளர்ந்து செழித்திருக்கிறது.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/