கிறிஸ்து பிறப்பிற்கு தயாராகுவோம்மாதிரி

கிறிஸ்து பிறப்பிற்கு தயாராகுவோம்

7 ல் 2 நாள்

ஆண்டவருடைய திட்டம் என்ன?

வாக்குத்தத்தங்களை அளிப்பதையும், பின்னர் அவற்றை நிறைவேற்றுவதையும் ஆண்டவர் மிகவும் விரும்புகிறார். இவைகளைத் தான் தீர்க்கதரிசனங்கள் என்று அழைக்கிறோம். ஆண்டவர் எதையாவது அறிவித்து இறுதியில் அதை நிறைவேற்றுவார்.

வேதாகமம் சொல்லுகிறது, “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”. (ஏசாயா 55:11)

மேசியாவின் வருகையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டவர் திட்டமிட்டிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? எரேமியா 29ல் காணப்படும் வாக்குறுதி இவ்வாறு சொல்கிறது, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11). ஆண்டவருடைய வார்த்தை அது அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் ஒருபோதும் திரும்பாது. எனவே ஆண்டவர் உங்களுக்காக திட்டங்களை வைத்திருக்கிறார் என்று அவர் கூறினால், அவர் அதை அர்த்தப்படுத்துகிறார். வெறும் வார்த்தைகளாக மட்டும் கூறவில்லை. மறவாதீர்கள் : “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12)

ஆண்டவரின் வார்த்தைகளும் அறிவிப்புகளும் எப்போதும் கூர்மையாக இருக்கும். ஆண்டவரின் தீர்க்கதரிசன அறிவிப்புகளைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம் உங்கள் சொந்த விருப்பம் மட்டும்தான்.

ஆண்டவருடைய வார்த்தை ஒரு நதி போன்றது - உங்களால் அதை தடுத்து நிறுத்த முடியாது. அதைத் திசைதிருப்ப நீங்கள் முயற்சிக்கலாம், ஆனால் உங்களால் அதை நிறுத்த முடியாது.

நான் ஒரு சிற்றோடைக்கு பக்கத்தில் ஒரு பழைய வீடு வைத்திருந்தேன். வீட்டிலிருந்த ஒரு அறையின் ஜன்னல் வழியாக சிற்றோடை மெதுவாக ஓட கேட்பதை நாங்கள் அனைவரும் விரும்பினோம். பனி உருகும் வரை அது ஆறுதலாகவும் புத்துணர்ச்சியுடனும் இருந்தது. பனி உருகிய பின் அது ஒரு பொங்கி வரும் நதியாக மாறியது. நல்ல வேலை வெள்ளம் பெருக்கெடுக்கும்போது நான் அங்கு இருந்தேன், ஏனென்றால் தடுப்புகளை கட்டி குழிகளை தோண்டி நீரோட்டத்தை திசை திருப்ப முடிந்தது. இப்படி செய்து அந்த வீட்டின் அடித்தளத்தை காப்பாற்ற எனது முழு சக்தியும் சில நண்பர்களும் தேவைப்பட்டனர்.

ஆண்டவருடைய வார்த்தையும் இப்படித்தான். பாய்வதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்கும் வரை அது நிற்காது; பாய்ந்து செல்வதற்குரிய நபரைக் கண்டுபிடிக்கும் வரை அது நிற்காது.

அந்த நபராக நீங்கள் இருப்பீர்களா?

உலகத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவர தேவன் தேர்ந்தெடுத்தவர்தான் இயேசு என்று வேதாகமம் சொல்கிறது: “தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:22-23). விஞ்ஞான ரீதியாக இந்த சமூகம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், ஆச்சரியமான விஷயம் என்னெவென்றால், பழங்கால தீர்க்கதரிசனங்களை நாம் மீண்டும் அணுகினால்தான் உண்மையான தீர்வு நமக்கு கிடைக்கிறது : இம்மானுவேல், ஆண்டவர் நம்முடன்.

நீங்கள் முன்பை விட இன்னும் அதிகமாக இயேசுவின் மீது சாய்ந்திருக்கவும், ஆண்டவரின் நதி உங்களை சரியான திசையில் வழிநடத்தவும் நான் ஜெபிக்கிறேன்.

ஏனென்றால் நீங்கள் ஒரு அற்புதம்!

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்து பிறப்பிற்கு தயாராகுவோம்

இது கிறிஸ்துமஸ் மாதம்! இந்த மாதம் நம் ராஜா இயேசுவின் வருகையைக் கொண்டாடுகிறோம். இந்த வாசிப்புத் திட்டத்தில், அவருடைய வருகைக்காக உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக்கொள்ளலாம் என்பதை பற்றி பேசுவோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=prepareforchristmas