குழந்தைகளுக்கு வேதாகமம்மாதிரி

குழந்தைகளுக்கு வேதாகமம்

8 ல் 1 நாள்

நம்மை உண்டாக்கியது யார்‌? தேவனுடைய வார்த்தையான வேதாகமம்‌ மனித குலம்‌ எப்படி உருவானது என்று கூறுகிறது. பல காலங்களுக்கு முன்னால்‌, தேவன்‌ முதல்‌ மனிதனை உருவாக்கி அவனுக்கு ஆதாம்‌ என்று பெயரிட்டார்‌. ஆதாமை தேவன்‌ மண்ணிலிருந்து படைத்தார்‌ தேவன்‌ ஜீவசுவாசத்தை அவன்‌ மேல்‌ ஊதிய போது அவன்‌ உயிருள்ளவனாகி, அழகான ஏதேன்‌ தோட்டத்தின்‌ நடுவில்‌ காணப்பட்டான்‌.

தேவன்‌ ஆதாமை உருவாக்குமுன்‌ அதிசயமான பொருளுடன்‌ கூடிய அழகான உலகத்தை உருவாக்கினார்‌. படிப்படியாக, குன்று பிரதேசம்‌, புல்வெளிகள்‌, அழாகான
பூக்கள்‌, உயர்ந்த மரங்கள்‌, பிரகாசமான இறகுள்ள பறவைகள்‌ மற்றம்‌ ரீங்காரமிடும்‌ தேனீக்கள்‌, புரளும்‌ திமிங்கலங்கள்‌ மற்றும்‌ வழுவும்‌ நத்தைகளை உருவாக்கினார்‌. உண்மையிலே, எல்லாவற்றையும்‌ நாம்‌ காண்கிற யாவையும்‌ உருவாக்கினார்‌.

ஆதியிலே, தேவன்‌ எல்லாவற்றையும்‌ உருவாக்குமுன்னா்‌, தேவனைத்‌ தவிர வேறு ஒன்றுமில்லை. ஒளியோ, இருளோ காணப்படவில்லை. உயர்வோ, தாழ்வோ இல்லை. முந்தின நாளோ, பிந்தின நாளோ இல்லை. ஆதியும்‌, அந்தமும்‌ இல்லாத தேவன்‌ ஒருவரே இருந்தார்‌. பின்பு தேவன்‌ கிரியை செய்ய ஆரம்பித்தார்‌!

ஆதியிலே, தேவன்‌ வானத்தையும்‌, பூமியையும்‌ உண்டு பண்ணினார்‌.

பூமியானது ஒழுங்கின்மையும்‌ வெறுமையுமாயிருந்தது. பூமியின்‌ மேல்‌ இருள்‌ இருந்தது. "வெளிச்சம்‌ உண்டாகக்கடவது" என்று தேவன்‌ சொன்னாரா.

வெளிச்சம்‌ உண்டாயிற்று. தேவன்‌ வெளிச்சத்திற்கு பகல்‌ என்றும்‌, இருளுக்கு இரவு என்றும்‌ பெயரிட்டார்‌. சாயங்காலமும்‌, விடியற்காலமுமாகி முதல்‌ நாள்‌ ஆயிற்று.

இராண்டாவது நாள்‌, ஆகாய விரிவின்‌ கீழ்‌, சமுத்திரத்திற்கும்‌, கடல்களுக்கும்‌, ஏரிகளுக்கும்‌ தண்ணீரை உண்டு பண்ணீனார்‌. மூன்றாவது நாள்‌, "வெட்டாந்தரை உருவாகட்டும்" என்று கூறினார்‌. அதுவும்‌ அப்படியே ஆயிற்று.

புல்‌, பூக்கள்‌ மற்றும்‌ புதர்கள்‌ உண்டாகும்‌ படி தேவன்‌ கட்டளையிட்டார்‌. அதுவும்‌ அப்படியே நடந்தது. சாயங்காலமும்‌, விடியற்காலையும்‌ சேர்ந்து மூன்றாம்‌ நாள்‌ ஆயிற்று.

பின்பு தேவன்‌ சூரியன்‌, சந்திரன்‌, யாராலும்‌ எண்ண முடியாத நட்சத்திரங்களையும்‌ உண்டு பண்ணினார்‌. சாயங்காலமும்‌ விடியற்காலமும்‌ சேர்ந்து நான்காம்‌ நாள்‌ ஆயிற்று.

அடுத்ததாக தேவனுடைய பட்டியலில்‌ கடலில்‌ வாழும்‌ மீன்களும்‌, பறவைகளும்‌ இருந்தன. ஐந்தாம்‌ நாளில்‌ தேவன்‌ பெரிய வாளை மீனையும்‌, சிறிய மத்தி மீன்களையும்‌, நீண்ட காலுடைய தீக்கோழிகளையும்‌, சிறிய சந்தோஷமான முனுமுனுக்கும்‌. பறவைகளையும்‌ உண்டாக்கினார்‌. தண்ணீரை நிரப்ப சகலவிதமான மீன்களையும்‌, ஆகாயத்தையும்‌, நிலப்பரப்பையும்‌ நிரப்ப சகலவிதமான பறவைகளையும்‌ உண்டாக்கினார்‌. சாயங்காலமும்‌, விடியற்காலமும்‌ சேர்ந்து ஐந்தாம்‌ நாள்‌ ஆயிற்று.

மறுபடியும்‌ தேவன்‌ பேசினார்‌. "பூமியானது வாழும்‌ உயிரினங்களை பிறப்பிக்கக்கடவது'' என்றார்‌. சகலவிதமான பிராணிகள்‌, பூச்சியினங்கள்‌, ஊறும்‌ பிராணிகள்‌ வந்தது. பூமியை அதிரவைக்கக்‌ கூடிய யானைகள்‌, சுறுசுறுப்பான நீர்‌ நாய்கள்‌, குறும்பு பண்ணுகிற குரங்குகள்‌, விகாரமான முதலைகளும்‌ இருந்தது. அசையும்‌ புழுக்கள்‌, அழகான அணில்கள்‌, கும்பலான ஒட்டகச்‌ சிவிங்கிகள்‌ மற்றும்‌ உறுமும்‌ பூனைகள்‌ வந்தது. இந்நாளில்‌ தேவன்‌ எல்லாவிதமான பிராணிகளையும்‌ உண்டாக்கினார்‌. சாயங்காலமும்‌ விடியற்காலமும்‌ சேர்ந்து ஆறாவது நாளாயிற்று.

ஆறாம்‌ நாளில்‌ தேவன்‌ விசேஷமான மற்றொன்றையும்‌ செய்தார்‌. மனுஷனுக்காக எல்லாம்‌ தாயாராயிருந்தது. வயல்‌ வெளிகளில்‌ உணவு இருந்தது மற்றும்‌ பிராணிகள்‌ அவனுக்கு சேவை செய்ய இருந்தன. நம்முடைய சாயலாக மனுஷனை உருவாக்குவோம்‌. அவன்‌ பூமியில்‌ உள்ள எல்லாவற்றையும்‌ ஆளுகை செய்யட்டும்‌ என்று தேவன்‌ சொன்னார்‌. தேவன்‌ தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்‌. அவனைத்‌ தேவசாயலாகவே சிருஷ்டித்தார்‌ ...

தேவன்‌ ஆதாமை நோக்கி, "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின்‌ கனியையும்‌ புசிக்கவே புசிக்கலாம்‌. ஆனாலும்‌ நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்‌ கனியைப்‌ புசிக்க வேண்டாம்‌. அதை ந் புசிக்கும்‌ நாளில்‌ சாகவே சாவாய்‌ என்று கட்டளையிட்டார்‌."

பின்ப தேவனாகிய கர்த்தர்‌, "மனுஷன்‌ தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்‌" என்றார்‌. தேவன்‌ லலித்‌ பறவைகளையும்‌, பிராணிகளையும்‌ ஆதாமிடத்தில்‌ கொண்டு வந்தார்‌.

ஆதாம்‌ அவைகளுக்கு பெயரிட்டான்‌. இவைகளை செய்வதற்கு அவன்‌ மகாபுத்திசாலியாக இருந்திருக்க வேண்டும்‌. ஆனாலும்‌ பிராணிகள்‌ ।மற்றும்‌ பறவைகள்‌ மத்தியில்‌ ஆதாமுக்கு ஏற்ற துணை அமையவில்லை.

ஆதாமுக்கு தேவன்‌ மிகவும்‌ அயாந்த நித்திரையை கொடுத்தார்‌. நித்திரையாயிருந்த ஆதாமின்‌ விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து, அதிலிருந்து மனுஷியை உருவாக்கினார்‌. தேவனால்‌ உருவாக்கப்பட்ட அந்த பெண்‌ ஆதாமுக்கு சரியான துணையானாள்‌.

ஆறுநாளில்‌ தேவன்‌ எல்லாவற்றையும்‌ உருவாக்கினார்‌. பின்பு தேவன்‌ ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதை ஓய்வு நாளாக மாற்றினார்‌. ஏதேன்‌ தோட்டத்திலே, ஆதாமும்‌ அவன்‌ மனைவி ஏவாளும்‌ தேவனுக்கு கீழ்ப்படிந்து பூரண சந்தோஷத்துடன்‌‌ காணப்பட்டனர்‌. தேவன்‌ அவர்களுக்கு ஆண்டவராகவும்‌, தேவைகளை சந்திக்கிறவராகவும்‌, நண்பனாகவும்‌ இருந்தார்‌.

முற்றும்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

குழந்தைகளுக்கு வேதாகமம்

அது எப்படி ஆரம்பித்தது? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? மரணத்திற்குப் பின் வாழ்ந்தாரா? உலகின் இந்த உண்மையான வரலாற்றைப் படிக்கும்போதே பதில்களைக் கண்டறியவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ஃபார் சில்ட்ரன், இன்க்.க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.bibleforchildren.org/languages/tamil/stories.php