மீட்பைத் தெரிவு செய்யுங்கள் மாதிரி
மீட்கவே மீட்கப்பட்டோம்
நீங்கள் பிறரை மீட்கும்படியாகவே பரிசுத்த ஆவியானவர் உங்களை மீட்கிறார்!
தேவனிடமிருந்து தான் பெற்ற உதவியைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக தாவீது சங்கீதம்51:13ல் சொல்கிறார்.
நம்முடைய மீட்பு நமக்கானது மட்டுமல்ல. ஒருநாளில் நீங்கள் பிறரை மீட்கத் தொடங்கும்படி தேவன் உங்களை அசைப்பார். இதைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி அழகாக எழுதுகிறார்,இஸ்ரவேல் மக்கள் சிறையிருப்பில் இருந்தாலும் தேவன் அவர்களை தப்புவித்து மீட்பார்; அதோடு முடிந்து விடுவதில்லை,தேவன் அவர்களைப் பயன்படுத்தி பட்டணங்களை மீண்டும் கட்டியெழுப்பி தேசத்தையே மீட்பார் என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
நம்முடைய மீட்பு ஒரு வாழ்நாள் செயல்பாடாக இருக்கும். அதே சமயத்தில்,பிறர் மீட்படைய உதவுவதற்கும் நாம் முன்வர வேண்டும். தேவன் தம்மையும்,தாம் அருளும் சுகத்தையும் காணும் விதத்தில் மற்றவர்கள் நம் வாழ்க்கையில் வருவதை விரும்புகிறார். தம்முடைய மீட்பின் வல்லமையை அனுப்புவதற்கான வாய்க்காலாக தன்னை மனமுவந்து ஒப்புக்கொடுக்கும் ஒருவரையே தேவன் தேடுகிறார்!
நீங்கள் ஒரு மாணவராகவோ,வேலை செய்பவராகவோ அல்லது வீட்டைப் பராமரிப்பவராகவோ இருக்கலாம் - யாராயிருந்தாலும் பரவாயில்லை. தேவையுடன் இருப்பவர்களுக்கு தயவும், தாராளமும் காண்பிப்பீர்கள் என்றால்,உடைந்துபோன சுவர்களை பழுதுபார்க்கிறவர்களாகவும்,தெருக்களை மக்கள் வாசம் பண்ணும் இடமாக மீட்பவர்களாகவும் மாறுவீர்கள். உங்கள் உதவியைப் பெறுபவர்கள் நிலையான மாற்றம் அடைவதோடு,அடுத்தடுத்த தலைமுறைகளும் பயனடைவார்கள்.
தேவன் தனிப்பட்ட விதத்தில் நம்மை எதற்காக அழைத்தாரோ அதன்படி நாம் வாழும்போதும், நாமிருக்கும் சூழலில் பிரதான கட்டளைக்குக் கீழ்ப்படியும்போதும்,நாம் சந்திக்கும் மக்களின் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் மீட்பைக் கொண்டு வருகிறோம் என்பதைக் காணலாம்.
சிந்தனைக்கு:
உங்கள் கதையை நீங்கள் யாரிடம் சொல்ல முடியும்? பிறர் சொல்வதை உங்களால் கவனித்துக் கேட்க முடியுமா?பிறருக்கு உதவி செய்ய முடியுமா? நீங்கள் தேவனுடைய நன்மையைத் தேக்கி வைக்கும் குளமாக இல்லாமல்,எப்படி மீட்பின் வாய்க்காலாக இருக்க முடியும்?வாய்க்காலானது தண்ணீரைப் பெற்றுக்கொண்டு பின்னர் கொடுக்கிறது,ஆனால் குளமோ தண்ணீரைத் தேக்கி மட்டுமே வைக்கிறது.
ஜெபிக்க:
உங்களைச் சுற்றியுள்ள தேவைகளைக் காணும்படி உங்கள் கண்களைத் திறக்குமாறும்,பிறருக்கு உங்களை ஆசீர்வாதமாக வைக்குமாறும் தேவனிடம் கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. அது இல்லாதபட்சத்தில், நம்மால் பழைய மாதிரிகள், மனப்பான்மைகள், பழக்கங்கள் மற்றும் நடத்தைகளிலிருந்து விடுபட முடியாது. வாழ்நாள் மீட்புப் பயணத்தின் முதல் அடிகளை எடுத்து வைக்க இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom