கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்: இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல் ஆகும்மாதிரி

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும்

4 ல் 1 நாள்

கிறிஸ்துமஸின் உண்மையான நோக்கத்தை நாம் மீண்டும் கண்டறிதல்

இந்த மகிழ்ச்சியான விழாக்காலங்களில் பெரும்பாலும் பொருள் வாங்குவது, களியாட்டுகளில் பங்கு பெறுவது, ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் வெகுமதிகள் பரிமாற்றம் செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் அதிகமாகி பலவேளைகளில் கிறிஸ்து பிறப்பும் அதின்மகிமையையும் மறைத்துப்போடுகிறது.

மற்றும் அதை மீண்டும் கொண்டுவர,நாம் ஆவிக்குரிய சிந்தனைகளுக்கு நம்மை உட்படுத்தி அதை வளர்ப்பதற்கு காரணமான செயல்களுக்கு நாம் முக்கியத்துவம்,தருவது மிகவும் தேவையானது.. உலகில், கிறிஸ்துமஸின் உண்மையான உணர்வை மீண்டும் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. கிறிஸ்துவின் வல்லமையை நாம் ஆராய்ந்து அவருடைய வல்லமைக்கு நம்மை ஓப்புக்கொடுப்பது அவருடைய பிறப்பின் காலத்தில் நமக்கு ஏற்றது. நாம் அனைவரும் இயேசுவுடனான ஆழ்ந்த ஆவிக்குரிய நெருக்கத்திற்கு நமது கவனத்தை மாற்ற வேண்டியதின் அவசியத்தை இந்த உறவு ந.ம்

யாவருக்கும் திட்டமாய் வலியுறுத்துகிறது.

கவனத்தை மாற்ற வேண்டிய அவசியம்

நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும்போது, ஆவிக்குரிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். வெகுமதிகளை சேர்ப்பதைவிட அவரது சமூகத்தில் மகிழ்ச்சியைக் கண்டறிதல் மற்றும் நண்பர்களின் உற்சாகம் கொண்ட கிறிஸ்துமஸ் கலாச்சாரத்தில் இருந்து நம் கவனத்தை சரியான வழிக்கு திசை திருப்ப வேண்டிய நேரம் இதுவாகும். கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம், இயேசுவின் பிறப்பை மையமாகக் கொண்டது, “கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக் 2:11).

இந்த அற்புதமான பிறப்பும் அதன் இரகசியமும் பெரும்பாலும் பொருள் களின் மேலுள்ள ஆர்வத்தால் மறைக்கப்படுகிறது.

வணிகவாதத்தின் எடுத்துக்காட்டுகள்:

கிறிஸ்துமஸ் காலத்தில் நண்பர்கள் என்பது மறுக்கமுடியாத வகையில் முக்கிய இடத்தை வகிக்கிறது. பொருள் வாங்குவதிலும் களியாட்டுகளில் மகிழ்ந்திருப்பதும் அலங்காரங்கள் செய்வதும் மற்றும் வெகுமதிகளை பரிமாற்றம் செய்வதும் ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் சில நேரங்களில் கிறிஸ்துமஸின் உண்மையான நோக்கத்தை மறைத்துவிடுகிறது.

கிறிஸ்துமஸை ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொள்வது: :

கிறிஸ்துமஸை ஆழ்ந்த ஆவிக்குரிய இணைப்புக்கான இணையற்ற வாய்ப்பாகக் கருதுவோம். மேலோட்டமானவற்றால் அலைக்கழிக்கப்படுவதற்குப் பதிலாக, இந்த காலத்தை இயேசுவோடு நெருங்கி வருவதற்கான வாய்ப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் புதிய நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் நாம் கண்டறிய முடியும். “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

(கொலோ 3:2).

தனிப்பட்ட உறவை வளர்ப்பது:

எல்லாவற்றிற்கும் மேலாக, விடுமுறை நாட்களில் இயேசுவுடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பதன் மூலம் கிறிஸ்துமஸ்ஸின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த இயலும்.. இந்த நெருக்கடியான கிறிஸ்துமஸின் ஆரவாரங்களுக்கு மத்தியில் நீடித்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிறைவின் உணர்வைத் கிறிஸ்துமஸ் நமக்கு தருகிறது.

சிந்தனையைத்தூண்டும் கேள்விகள்:

1. இந்த கிறிஸ்துமஸில் உங்கள் கவனத்தை நண்பர்களிலிருந்தும் மற்றும் விவாதங்களிலிருந் ம் இயேசுவுடன் ஆவிக்குரிய நெருக்கத்திற்கு தனிப்பட்ட முறையில் எவ்வாறு மாற்றலாம்?

2. கிறிஸ்துமஸின் உண்மையான நோக்கத்தை உங்கள் கொண்டாட்டங்களில் முன்னணியில் வைக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில நடைமுறை வழிகள் யாவை?

3. இயேசுவுடனான உங்கள் உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக உங்கள் கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள் மற்றும் பண்டிகைகளை நீங்கள் எந்த வழிகளில் பயன்படுத்தலாம்?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும்

வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பாரம்பரியங்களை அல்லது பழக்க வழக்கங்களை நடைமுறைக் கொள்வதில் நாம் உற்சாகத்துடனும் பிறரை மகிழ்விப்பதில் ஞானத்துடனும் நடந்து கொள்வது அவசியம். மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை நண்பர்களுடன் வளர்ப்பது அவர்கள் மேலுள்ள நமதுஅன்பைக் காட்டுகிறது. . மற்றவர்களுடைய இரட்சிப்பின் மேலும் நமது நீங்காத பாரத்தையும் அவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபவாஞ்சையையும் ஏற்படுத்துகிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie Davidக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/