கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்: இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல் ஆகும்மாதிரி

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும்

4 ல் 3 நாள்

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவே நாம் பெற்ற நமது வெகுமதி கிறிஸ்து என்ற இரட்சிப்பு. இந்த வெகுமதியை எவ்விதம் பிறருடன் பகிர்ந்து கொள்வது.

கிறிஸ்துமஸின் கொண்டாட்டத்தில், நாம் பெற்ற ஆற்றல், மற்றும் வெகுமதிகளை கொடுப்பதிலும் பெறுவதிலும் உள்ள முயற்சிகளை பரிமாறிக்கொள்ளும் பாரம்பரியம் பெரும்பாலும் .நமக்குள் செயல்படுவதை அறிந்திருக்கிறோம். உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவே நமது விலை இல்லாத பரிசானவர். நம் உள்ளமும் மனதும் உலக பிரகாரமான வெகுமதிகளையும், செல்வங்களையும், அந்தஸ்துகளையும் தேவனிடம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும்போது மெய்யான வெகுமதியான இயேசுவின் அன்பிலிருந்து நாமாகவே விலகி விடும் சூழ்நிலைஉருவாகிறது. எனவே அவரில் நிலைத்திருப்பதையே நா டுவோம்.

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை (கலா 5:22‭-‬23).

எனவே நாம் ஆவியின் கனிகளைக் கொடுக்கவும் இந்த ஆண்டு முதல் இனி வரும் காலங்களில் இயேசு என்னும் விலையேறப் பெற்ற இந்த இரட்சிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு நாம் நமது நடைமுறை செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

கிறிஸ்துமஸை புரிந்து கொள்ள மற்றுமசெயல் படுத்த புதிய வழிபாடுகளை அறிமுகப்படுத்துதல்: கால வரையரையற்ற பாரம்பரியங்களை மறுபரிசீலனை செய்தல்

பாரம்பரியங்கள் அடிக்கடி நம் வழக்கத்தில் கலாச்சாரங்களாக மாறிவிடுகிது. இவ்வுலகில், நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் புதிய வழக்கத்தை நடைமுறையில் தருவதற்கு

சரியான நேரம் இதுவேதான். இந்த நேரத்தில் நாம் ஒரு புதுமையான கண்ணோட்டத்தைப் பெற்றகொள்வதின் மூலம், கிறிஸ்துமஸின் காரணரான இயேசுவின் தாழ்மையான பிறப்பின் மீது நம் கவனத்தை புதுப்பிக்க முடியும். அவரது அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கான புதுமையான வழிகளைப்பற்றிஆராய்வோம்,

பழைய முறைகளிலிருந்து விலகி, இந்த பண்டிகைக் காலத்தில் ஒரு புதிய உணர்வைக் கொண்டு வருவோம்.

இளைஞர்கள்: உங்கள் உள்ளூர் தேவாலயம் அல்லது சமூக மையத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.இளைஞர்களாகிய வருங்கால தலைவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை நடத்துவதற்கான நிகழ்வுகளை நடத்த அனுமதியுங்கள். திட்டமிட்டு செயல் படுங்கள். முதியோர் இல்லங்களில் (carolling) கிறிஸ்தவ பாடல்களை பாடி பஜனை செய்தல் முதியோர்களின் உற்சாகத்தை வலுவூட்டும் நிகழ்ச்சி ஆகும். மற்றும் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள். உதவி தேவைகள் போன்ற செயல்பாடுகளை ஒழுங்கமைக்க முயற்சி செய்யுங்கள்.

“மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்(மத் 25:40).

இந்த நிகழ்வின் போது இளைஞர்கள் தங்களின் தனிப்பட்ட நம்பிக்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்பளிக்கவும் மற்றும், இயேசு மூலமாக அவர்களின் வாழ்வில் உண்டான மாற்றங்கள் இவைகளை பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தலும் நல்லது.

குழந்தைகள்: இவர்களை செய்கையோடு பாடல்களை பாட கற்று கொடுத்து சந்தோசப்படுத்துவது மிகவும் ஆர்வத்தை தரும்.

தம்பதிகள்: தம்பதிகளுக்கு, உள்ளூர் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து தன்னார்வத்துடன் தொண்டு செய்வதை உற்சாகப்படுத்தலாம். அல்லது நிதி திரட்டும் நிகழ்வில் பங்கேற்பதை மதிக்கும் வார்த்தைகள் மற்றும் உங்கள் உறவையும் நம்பிக்கையையும் பலப்படுத்தக்கூடிய அனுபவங்களில் செயல்பட உதவி செய்யுங்கள். இயேசுவின் தாழ்மையான பிறப்பை மையமாகக் கொண்ட தேவாலய சேவையில் கலந்துகொண்டு அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும்.விவாத மேடை அனுபவங்களை உற்சாகப்படுத்தவும் செய்யும் போது இயேசுவின் அன்பு மற்றும் சேவை அதிகமாக வளர்கிறது.

நடுத்தரவயது:

கிறிஸ்துமஸின் ஆவிக்குரிய அம்சங்களைப் பற்றிய உரையாடல்களில் கலந்துகொள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைக்கும் வகையில், நடுத்தர வயதுடையவர்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கூட்டத்தை நடத்தலாம். இப்பிறப்பின் காலத்தில் கிறிஸ்துவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இன்றைய சிந்தனைக்கான கேள்விகள் கேட்பதின்மூலம் ஆழமான செய்திகள் நம்மை ஜெபங்களுக்கு நேராக நம் இருதயத்தில் இடத்தை உருவாக்குகின்றன.

முதுமை: விடுமுறை நாட்களில் தனிமையில் இருக்கும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் வயதானவர்கள் தொடர்பு கொள்ளலாம். முதியவர்களுக்காக ஒரு கிறிஸ்துமஸ் கூட்டத்தை நடத்துங்கள், அதில் பாடல்கள், வேத வாசிப்புகள் மற்றும் பகிரப்பட்ட உணவு. அவர்களுக்குப் பிடித்தமான கிறிஸ்துமஸ் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுடைய வாழ்க்கையில் இயேசு எப்படி பிரசன்னமாக இருந்தார் என்பதை சாட்சியாக எடுத்துரைக்க கூறவும்.

தனிமை மற்றும் காயப்படுத்துதல்: விடுமுறை நாட்களில் தனிமையாக இருப்பவர்கள் அல்லது வேதனைப்படுபவர்களை அணுகவும். உங்கள் குடும்பக் கொண்டாட்டங்களில் சேர அவர்களை அழைக்கவும் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆதரவை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து உதவும் முயற்சி யில் செயல்படுங்கள். இறைவன் இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் குணப்படுத்துதல் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இயேசு எவ்வாறு நமக்கு ஆறுதலையும் மறுசீரமைப்பையும் தருகிறார் என்பதை வலியுறுத்திக்காட்டுங்கள். என் “பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்(1 யோவா 3:18).

பாரம்பரிய வெகுமதி வழங்கும் நடைமுறைகளில் இருந்து விலகி, இயேசுவின் தாழ்மையான பிறப்பின் கதையை எடுத்துக் கூறி சுற்றியுள்ள அனைவர் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளில் கவனம் செலுத்துவதே நமக்கு முக்கியமானது. இந்த நடைமுறையின் அணுகுமுறைகள் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தில் நம்மை நடத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது மற்றவர்களின் வாழ்க்கையில் அவருடைய அன்பையும் ஒளியையும் நாம் தடையில்லாமல் கொண்டு வரகிறிஸ்து பிறப்பு நமக்கு காரணமாகின்றது. .

சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்:

1. கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உங்கள் பரிசு வழங்கும் மரபுகளை எவ்வாறு மாற்றலாம்?

2. இயேசுவுடனான உங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்த உங்கள் விடுமுறைக் காலத்தில் என்ன குறிப்பிட்ட கருணைச் செயல்களை நீங்கள் இணைக்கலாம்?

3. கிறிஸ்மஸ் கூட்டங்களின் போது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட உரையாடல்களை நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்கலாம்?

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும்

வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பாரம்பரியங்களை அல்லது பழக்க வழக்கங்களை நடைமுறைக் கொள்வதில் நாம் உற்சாகத்துடனும் பிறரை மகிழ்விப்பதில் ஞானத்துடனும் நடந்து கொள்வது அவசியம். மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை நண்பர்களுடன் வளர்ப்பது அவர்கள் மேலுள்ள நமதுஅன்பைக் காட்டுகிறது. . மற்றவர்களுடைய இரட்சிப்பின் மேலும் நமது நீங்காத பாரத்தையும் அவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபவாஞ்சையையும் ஏற்படுத்துகிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie Davidக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/