இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்மாதிரி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

7 ல் 6 நாள்

கிறிஸ்துமஸ் நீ நினைப்பது போன்ற ஒன்று அல்ல

கிறிஸ்துமஸ்: புத்தாடை, விளக்குகளின் வண்ணங்கள், ஒரு கிறிஸ்துமஸ் மரம், ஒரு நீண்ட பலகாரப் பட்டியல் தொகுப்பு, குடும்பக் கூடுகைகள், மற்றும் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளுதல் போன்றவைதான் கிறிஸ்துமஸ் என்று நாம் நினைக்கிறோம். கிட்டத்தட்ட இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கேற்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இருந்தால், அந்தக் கூட்டத்தினர் ஓரங்கட்டப்படுகிறார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுகிறார்கள் எனலாம். அதுவும் தனிமையில், சமூகத்தினரால் ஓரத்தின் விளிம்புகளில் தள்ளப்பட்ட கூட்டத்தினாராக அவர்கள் இருப்பார்கள்.

ஆனால் முதன் முதலான கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வைப் பார்க்கும்போது, முற்றிலும் மாறுபட்ட படத்தைக் காண்கிறோம். உலக இரட்சகராகிய இயேசு அரண்மனையில் பிறக்கவில்லை, மாறாக, அவர் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். அவருடைய தாய் அதிக வசதி படைத்தவள் அல்ல, அவள் ஒரு ஏழைப் பெண்மணியாவாள். நற்செய்திகளை மிகப்பெரிய நகரத்தில் தேவன் கேட்கச் செய்யவில்லை, மாறாக வயல்வெளிகளில், அரண்மனைக்கு சம்பந்தம் அற்ற ஒரு இடத்தில் கேட்கச் செய்தார். அச்செய்தியைக் கேட்ட மக்களும் மேய்ப்பர்களும் சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவர்களாய் இருந்தனர்.

மேய்ப்பர்கள் இயேசுவின் பிறப்பைக் கண்டதும், நற்செய்தியைப் பரப்பும் அளவுக்கு அவர்கள் ஈர்க்கப்பட்டனர். ஆனால் மற்ற வெளி உலகத்தினர் இயேசுவைத் தேடி வந்ததாக வேதாகமத்தில் நீங்கள் எங்கும் வாசிக்க முடியாது. பொதுவாக, அது அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருக்கவில்லை.

கிறிஸ்துமஸ் என்பது நாம் நினைப்பதுபோன்ற ஒன்றல்ல. ஆண்டவர் நேரடியாக உலகை கவனித்துக்கொள்ள தொடங்கியதின் துவக்கமாகும். புரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி, ஆண்டவர் தமது சொந்தக் குமாரனை நமக்காகக் கொடுத்திருக்கிறார். இயேசு தம்மைத் தொழுவத்தில் ஒரு பலவீனமான சிறு குழந்தையாக ஈந்தார். மரியாளுக்கும் கூட அதைப் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருந்தது. பின்பு அவற்றைச் சிந்தித்துப் பார்க்கும்படிக்கு, அவள் எல்லாவற்றையும் தன் இருதயத்தில் வைத்துக்கொண்டாள்.

ஒருவேளை இதன் மூலமாக நீ இயேசுவை அறிந்துகொள்ள வேண்டிய நேரமாக இது உனக்கு இருக்கலாம். அவரிடத்தில் நீ முற்றிலும் உன்னை அர்ப்பணித்துவிடு. ஆண்டவர் ஒரு அற்புதமான வழியில் வரலாற்றை மீண்டும் தொடங்கிவிட்டார்.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்

லூக்கா எழுதின சுவிசேஷமானது ஒரு படம் எடுப்பதற்கேற்ப அழகாக வடிவமைக்கப்பெற்று சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அது உன்னை இயேசுவுடன் சேர்ந்து பயணிக்க வழிநடத்துகிறது. கிறிஸ்துமஸ் காலத்துக்கு ஆயத்தமாகும் பயணத்தில் தொடங்கி, அவரது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் உணர்ந்து பார்ப்போம். இதை எழுதிய ஆசிரியர் லூக்காவின் பார்வையில் அதைப் பார்க்கும்போது, நாமும் கதையை உற்சாகமாய் ரசிக்க இயலும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=ontheroadtochristmas