இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவுடன் பயணிப்போம்மாதிரி
ஒரு பைசா ஒரு ரூபாய்க்கு ஈடாக முடியாது!
இது போன்ற பேச்சு வாக்கை நீ எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ ஒரு ஏழையாகப் பிறந்திருந்தால், ஒருபோதும் பணக்காரனுக்கு ஏற்ற நடத்தையை பெற்றிருக்க மாட்டாய். நீ சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தில் வளர்ந்தால், 'உயர்தர' அந்தஸ்திற்கு மாறுவது கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட அந்தஸ்து, வர்க்க வேறுபாடுகள் பற்றிய பல கதைகள் நாம் அறிந்ததே. எப்படியோ, அது இன்னும் நம் மனதிலும் அனுபவங்களிலும் இருக்கிறது.
மரியாளின் கதை வேறொரு காரியத்தையும் காட்டுகிறது. மனிதர்களைப் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தை நாம் அதில் காண்கிறோம். முதலாவதாக, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை மரியாளின் வருகைக்கு பதிலளிப்பதை நான் கவனிக்கிறேன். அது எவ்வளவு விசேஷமானது! என் மனைவியின் கர்ப்ப காலத்தில், எங்கள் குழந்தை வெளிப்புற ஓசைகளுக்கு பதிலளித்தது என்று அவள் அடிக்கடி குறிப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது. தாயின் கருவில் சிசுக்கள் வாழ்வதாக வேதாகமம் நமக்குக் காட்டுகிறது.
எலிசபெத்தின் வயிற்றிலிருந்து வந்த வாழ்த்துதலும், தனது அத்தையுடனான சந்திப்பும், மரியாளை உற்சாகப்படுத்தியதை இங்கு காண்கிறோம். அவள் மகிழ்ச்சியுடன் பாடத் தொடங்குகிறாள், தன் மனதில், அவளது எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான சித்திரத்தைப் பெறுகிறாள். அவள் தன்னை ஒரு சாதாரண பெண்ணாகவே பார்த்தாள். ஒருவேளை அவள் தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்டிருக்கக் கூடும். அவள் எதிர்பாராதவிதமாக கர்ப்பமானாள். மக்கள் அவளைப் பற்றி வதந்திகளைப் பரப்பியிருக்கக் கூடும். அவள் காரணமின்றி எலிசபெத்தைச் சந்திக்க போகவில்லை. ஒருவேளை அவளது கிராமத்தில் உள்ள மக்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்கவே அவள் அங்கு சென்றிருக்கலாம். அவளுடைய வருங்கால கணவர் யோசேப்பு அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவில் தேவன் அவளைக் கண்ணோக்கிப் பார்த்தார். அவர் தமது உண்மை நிலையையும் அவர் அவளை எப்படிப் பார்க்கிறார் என்பதையும் சுட்டிக் காட்டினார். மரியாள் தன்னைக் கற்பனை செய்து பார்த்திராத அளவிற்கு விசேஷித்த ஒரு நபராக மாறுவாள் என்பதை ஆண்டவர் பார்த்தார். ஒரு சாதாரண பெண்ணின், வாழ்க்கை விசேஷித்த ஒன்றாக மாறியதைப் பார்..
நமக்கும் இது தூரமான ஒன்றல்ல. ஆண்டவர் அந்தஸ்தையும் வம்சத்தையும் பார்ப்பதில்லை. நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே ஆண்டவர் உன்னைப் பார்க்கிறார். விசேஷித்த ஒரு நபராக, அவரால் விரும்பப்படும் ஒரு நபராக, ஒரு நோக்கத்துடன் உன்னைப் பார்க்கிறார். இவ்விஷயத்தில் சந்தேகம் வேண்டாம். ஆண்டவர் உன் மீது அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பு. அவர் உன் மீது தம்முடைய கண்களை வைத்திருக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
லூக்கா எழுதின சுவிசேஷமானது ஒரு படம் எடுப்பதற்கேற்ப அழகாக வடிவமைக்கப்பெற்று சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அது உன்னை இயேசுவுடன் சேர்ந்து பயணிக்க வழிநடத்துகிறது. கிறிஸ்துமஸ் காலத்துக்கு ஆயத்தமாகும் பயணத்தில் தொடங்கி, அவரது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் உணர்ந்து பார்ப்போம். இதை எழுதிய ஆசிரியர் லூக்காவின் பார்வையில் அதைப் பார்க்கும்போது, நாமும் கதையை உற்சாகமாய் ரசிக்க இயலும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=ontheroadtochristmas