அழைப்புமாதிரி
நான் எங்கு தொடங்க வேண்டும்?
நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றுடன் செய்யத் தொடங்கலாம்.
உங்களுக்கு ஆசீர்வாதமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகள் யாவை?
நீங்கள் நன்றாக சமைப்பீர்களா? உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? நன்றாகப் புகைப்படம் எடுப்பீர்களா? பிறருடன் இனிமையாகப் பழகுபவரா? பிறர் பகிர்ந்துகொள்வதை செவிகொடுத்துக் கேட்பவரா? சிறுபிள்ளைகளை நன்றாக நடத்த வல்லவரா? நன்றாக காணொளிக் காட்சிகளைப் படம் பிடிப்பீர்களா? வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்வது என்று தெரியுமா?
உங்களுக்குச் செய்யப் பிடித்த ஒன்றில் தொடங்குங்கள்.
உங்களுக்குச் செய்யப் பிடித்ததை அதிகம் செய்யுங்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு அதைச் செய்யுங்கள்.
அன்புடன் செய்யுங்கள்.
அதை தேவனுக்குச் செய்வது போல சிறப்பாகச் செய்யுங்கள்.
ஒன்றும் செய்யாமல், அழைப்புக்கு பதில் கொடுத்து, அதை நிறைவேற்றுவது கூடாத காரியம்.
நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து அது தொடங்க வேண்டும்.
உங்கள் வரங்களையும், தாலந்துகளையும் கொண்டு மக்களுக்கு சேவை செய்யும்போது, அவர்கள் அன்பை உணருவார்கள்; அன்பு ஒருக்காலும் ஒழியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
சிறு சிறு காரியங்களை மிகுந்த கவனத்துடன் செய்வதில் அது தொடங்குகிறது. மிகச்சிறு செய்கைகளிலும், தேவனுடைய அன்பைக் காண முடியும்.
ஆனால் ஒன்றும் செய்யாமல் மட்டும் உட்கார்ந்திருக்காதீர்கள்; உங்களிடம் இருப்பதைக் கொண்டு தொடங்குங்கள். தொடர்ந்து தேவனுடன் அதிக நேரம் செலவிடும்போது, அவர் உங்களைத் தெளிவாக வழிநடத்துவார். இரவிலும், பகலிலும் அவர் உங்களுக்கு வழிகாட்டி, வழிநடத்துவார்.
இப்போது உங்கள் கையில் இருப்பது என்ன?
அந்த ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் அவர் கரத்தில் கொடுங்கள், அல்லது வெறுங்கையையாகிலும் அவரிடம் கொடுங்கள்.
ஆனால், ஏதேனும் ஒரு இடத்தில் தொடங்கிவிடுங்கள்...
ஏனென்றால், எல்லாமே பூஜ்யத்தில்தான் தொடங்குகிறது, உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது!
வேதவாசிப்புப் பகுதி:
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அழைப்பு என்பது ‘ஸீரோ கான்’ மாநாட்டில் பிறந்த வேதாகமத் திட்டம். அது, ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கான தேவனுடைய அழைப்புக்கு இணங்குவதில் கவனம் செலுத்தும் 3-நாள் பயணம்; நாம் இப்போதிருக்கும் நிலையில் தொடங்கி, கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம்வகிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் முக்கியத்துவத்தையும் அறிந்துணர்ந்து, நம்முடைய வரங்களையும், தாலந்துகளையும் கொண்டு பிறருக்கு சிறப்பாக சேவை செய்வதைப் பற்றியது.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/