விலைக்கிரயம்மாதிரி
நீங்கள் செலுத்த வேண்டிய விலைக்கிரயம்
பொருளுதவிகளை திசைதிருப்புவதும், சென்று சந்திப்பதும்
இரண்டாம் நாள் வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இன்று,
விலைக்கிரயம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய படிகளை ஆய்வு செய்வோம்:
அவை, பொருளுதவிகளை திசைதிருப்புதல், நம் ஊழியத்தை மறுமதிப்பீடு செய்தல்
மற்றும் நம் வாழ்க்கைமுறையை மறுவடிவமைத்தல்.
இந்தப் படிகளுக்கு ஏற்ற வேதவசனங்கள் மற்றும் கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம்.
படி 1: பொருளுதவிகளை திசைதிருப்புதல்
அப். 1:8 – “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்,
எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”
கிறிஸ்தவ சந்திப்பு மற்றும் சுவிசேஷம் அறிவித்தலுக்கு தற்போது ஒதுக்கப்படும்
பொருளுதவிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இத்தகைய முயற்சிகளில்
குறிப்பிடத்தக்க சதவிகிதம் (91%) கிறிஸ்தவரல்லாதவர்களுக்காக செய்யப்படுவதற்கு
மாறாக கிறிஸ்தவர்களுக்கே செய்யப்படுகிறது என்பது துரதிஷ்டவசமானது. இதுவரை
சுவிசேஷத்தைக் கேட்காதவர்களுக்குப் பயன்படும்படி இந்தப் பொருளுதவிகளை
திசைதிருப்பினால் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படும் என்பதைக் கருத்தில்
கொள்ளுங்கள்.
அதோடு, மிஷினரிகள் எவ்விதமாகப் பரவி இருக்கிறார்கள் என்று பாருங்கள்;
சந்திக்கப்பட்ட இடங்களில் அதிக அளவிலும் (76%), ஒருமுறை கூட சுவிசேஷத்தைக்
கேட்டிராத பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலுமே (1%) மிஷினரிகள் ஊழியம்
செய்கிறார்கள். சந்திக்கப்படாதவர்களையும், சுவிசேஷம்
அறிவிக்கப்படாதவர்களையும் சந்திக்க நம் முன்னுரிமைகளில் மாற்றம் ஏற்பட
வேண்டுமென்று ஜெபியுங்கள்.
படி 2: நம் ஊழியத்தை மறுமதிப்பீடு செய்தல்
மாற்கு 11:12-14-ல் இயேசு அத்திமரத்தை சபிப்பதைப் பற்றி வாசிக்கவும்.
நம்முடைய ஊழிய முறைகளை மதிப்பீடு செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி
யோசிக்கவும்.
“சுவிசேஷ வறுமையை” ஒழிப்பதும், பயனுள்ள விதத்தில் சுவிசேஷம் அறிவிக்க முயற்சி
செய்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்வதுமே நம் குறிக்கோளாக இருக்க
வேண்டும். தேவராஜ்யத்திற்குப் பயனளிக்கும் விதத்தில் நம்முடைய யுக்திகளையும்,
முறைமைகளையும், அணுகுமுறைகளையும் மறுமதிப்பீடு செய்ய ஞானம் வேண்டி
ஜெபம் பண்ணுங்கள்.
படி 3: நம் வாழ்க்கைமுறையை மறுவடிவமைத்தல்
மத்தேயு 6:25-ல், நம் தேவைகளுக்காக கவலைப்படாதிருக்க வேண்டுமென்பதைப்
பற்றிய இயேசுவின் போதனையை வாசிக்கவும்.
2 கொரிந்தியர் 11:27-ல் சொல்லப்பட்டுள்ள பவுலின் வாழ்க்கையைப் பற்றி
யோசித்துப் பாருங்கள். பவுல் பெரும்பாலும் தூக்கத்தையும், உணவையும்,
வசதியையும், பாதுகாப்பையும் தியாகம் செய்து, ஊழியத்திற்காக தன்னை
முழுமனதுடன் அர்ப்பணித்திருந்தார். தன் சொந்த சவுகரியங்களை தியாகம் செய்து
சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்திய CT
ஸ்டட் அவர்களின் வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கைமுறையையும், அது எப்படி சுவிசேஷம் பரவுவதற்கு ஏற்றதாக
இருக்கிறது என்பதையும் மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் தியாக மனப்பான்மை
கொண்டிருக்கவும், தேவராஜ்யத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து
எல்லாவற்றிற்காகவும் தேவனை நம்பி வாழவும் முன்வர வேண்டுமென்று
ஜெபியுங்கள்.
முடிவுரை:
இன்று, பொருளுதவிகளை திசைதிருப்புதல், நம் ஊழியத்தை மறுமதிப்பீடு செய்தல்
மற்றும் நம் வாழ்க்கைமுறையை மறுவடிவமைத்தல் ஆகிய படிகளை ஆய்வு
செய்தோம். சற்று நேரமெடுத்து, இப்படிகளை மீண்டும் யோசித்துப் பார்த்து, அவற்றை
உங்கள் வாழ்க்கையில் கைக்கொள்ள தேவன் உங்களை வழிநடத்துமாறு
ஜெபியுங்கள். இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் சந்திக்கப்படாதவர்களைச்
சந்திப்பதில் ஒரு மாற்றத்தை உண்டாக்க தேவன் நம்மை பலப்படுத்துவாராக.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தியாவில் சந்திக்கப்படாத மக்களைச் சந்திப்பதில் கவனம் செலுத்தும் இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தியாவின் முக்கியத் தேவைகளை அறிந்துகொள்வதில் தொடங்கி, அவற்றைச் சந்திப்பதற்கான விலைக்கிரயத்தையும், தேவன் தம் ஜீவனையே பலியாகக் கொடுத்து செலுத்திய நிறைவான விலைக்கிரயத்தையும் பற்றி இதில் பார்ப்போம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/