விலைக்கிரயம்மாதிரி
நிறைவான விலைக்கிரயம்
தேவன் தம் ஜீவனையே நமக்காகக் கொடுத்து செய்த அளப்பரிய தியாகத்தைப் பற்றி
சிந்திப்போம்.
அதற்கு செலுத்தப்பட்ட விலைக்கிரயம் மிக அதிகமானது, அதற்காக நம்மை நாமே
முழு மனதுடன் அர்ப்பணிக்க வேண்டும்.
முழுவதும் அர்ப்பணிக்காதது அர்ப்பணிப்பே அல்ல:
நம் விசுவாசப் பயணத்தில், தீர்மானம் செய்ய வேண்டியது நம் கையில்தான்
இருக்கிறது. முழுவதும் அர்ப்பணிப்பது அல்லது அர்ப்பணிக்காமல் இருப்பது என்ற
இரண்டில் ஒன்றை நாம் தெரிவு செய்ய வேண்டும். நம்மை முழுவதுமாக முதலீடு
செய்து, நம்மை முற்றிலுமாக தேவனுக்குக் கொடுத்துவிட அழைக்கப்படுகிறோம்.
அரைமனதுடன் அர்ப்பணிக்கும்போது, உண்மையில் தேவையான அர்ப்பணிப்பு
இல்லாமல் போய்விடுகிறது.
தேவனுடன் ஆழமான மற்றும் அந்நியோன்ய ஐக்கியம் கொண்டிருப்பதற்கு, நம்மை
முற்றிலும் அர்ப்பணிக்க அழைக்கப்படுகிறோம்.
அதாவது, தேவனால் வராத அனைத்தையும் நாம் விட்டுவிட வேண்டும். இத்தகைய
அர்ப்பணிப்பே தேவ பிரசன்னத்தின் முழுமையை அனுபவிப்பதற்கான திறவுகோல்.
அதற்கு செலுத்த வேண்டிய விலைக்கிரயத்தைப் பற்றிய வல்லமையான ஒரு
உவமையை மத்தேயு 13:44 கூறுகிறது. அதில், பரலோக ராஜ்யம் ஒரு நிலத்தில்
புதைந்திருக்கும் பொக்கிஷத்திற்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது. அந்தப்
பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கும் ஒருவர் மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைந்து,
தனக்கிருக்கும் அனைத்தையும் விற்று அந்த நிலத்தை வாங்குகிறார். அந்தப்
பொக்கிஷத்தை அடைய அந்த மனிதர் தனக்குள்ள அனைத்தையும் தியாகம் செய்ய
தானாக முன்வருகிறார்.
நம் விசுவாசத்திற்காக நம்முடைய அனைத்தையும் கொடுப்பதன் முக்கியத்துவத்தை
இந்த உவமை வலியுறுத்துகிறது. அந்த உவமையில் உள்ள நபர் தனக்குச் சொந்தமான
அனைத்தையும் விற்றுவிட்டது போல, நாமும் நமக்குரிய அனைத்தையும் தேவனுக்குக்
கொடுத்துவிட அழைக்கப்படுகிறோம்.
இது மிகப்பெரிய விலைக்கிரயமாகத் தோன்றலாம், ஆனால் அதற்கு பதிலாக நாம்
பெற்றுக்கொள்ளும் சந்தோஷமும், நிறைவும் அளவிட முடியாதது.
நாம் விலைக்கிரயம் என்று நினைக்கும் அனைத்தும், நாம் நஷ்டம் என நினைக்கும்
அனைத்தும் – அவை அனைத்தையும் சேர்த்தாலும் – நம் வாழ்க்கையில் இயேசுவை
சொந்தமாகக் கொண்டிருப்பதால் வரும் எல்லையற்ற பலனுக்கு ஈடாகாது.
இன்று, தேவன் நமக்காக செலுத்திய நிறைவான விலைக்கிரயத்தை நினைத்துப்
பார்ப்போம், அது நம்மை முற்றிலும் அவருக்குக் கொடுத்துவிட நமக்கு உத்வேகம்
அளிக்கட்டும். அவரை நம் வாழ்வில் முழுமையாகக் கொண்டிருக்க, நம்முடைய
அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்போம்.
இந்த விலைக்கிரயம் மிக அதிகமானதாகத் தோன்றலாம், ஆனால் இயேசுவை
சொந்தமாகக் கொண்டிருப்பதால் வரும் அளவிட முடியாத பலன் நாம் தியாகமாகக்
கருதும் எதையும் விட மிக மேலானது.
நாம் பெறக்கூடிய மிக மேலான பொக்கிஷம் இயேசுவே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தியாவில் சந்திக்கப்படாத மக்களைச் சந்திப்பதில் கவனம் செலுத்தும் இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தியாவின் முக்கியத் தேவைகளை அறிந்துகொள்வதில் தொடங்கி, அவற்றைச் சந்திப்பதற்கான விலைக்கிரயத்தையும், தேவன் தம் ஜீவனையே பலியாகக் கொடுத்து செலுத்திய நிறைவான விலைக்கிரயத்தையும் பற்றி இதில் பார்ப்போம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/