தூக்கமின்மைமாதிரி
இந்தப் பாடல் அவருக்கான உள்ளான நோக்கத்தைக் கொண்டிருந்தது!
"அதிக சிந்தனை என் தூக்கத்தை நான் இழந்துபோகும்படி செய்தது; வாழ்க்கை நிறைவாய் இருக்கிறது, ஆனால் அதேநேரத்தில் என் இருதயம் வெறுமையாக இருக்கிறது." இது நான் கடைசியாக வெளியிட்ட பாடலின் வரிகளாகும். உண்மையில், எனக்குத் தூக்கம் வராத இரவு நேரங்களில்தான் நான் வெளியிட்ட பல பாடல்களை எழுதியிருந்தேன் என்று சொல்ல வேண்டும்.
"நான் நித்திரையில்லாமல்" (சங்கீதம் 102:7) என்று தாவீது கூட சொல்லியிருக்கிறார்! சங்கீதங்கள் முழுவதும் இதே போன்ற மற்ற வசனங்களை நாம் வாசிக்கமுடியும். ஆம், தாவீதுக்குக்கூட தூங்குவதில் சிக்கல் இருந்தது! ஆனால் தாவீதின் எழுத்துக்களில் உள்ள அழகான ஒன்று என்னவென்றால், அவர் ஒருபோதும் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்காமல் விடுவதில்லை. அவர் தனது பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்தார் என்பதை எப்போதும் நமக்குக் காண்பிக்கிறார்.
"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது, உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது" (சங்கீதம் 63:6-8 )
இந்த வசனத்தை என் பாடலில் பயன்படுத்தினேன், பிறகு வானொலியில் அந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
வானொலியில் அறிக்கையிடுபவர்கள், இவ்வசன பாடலைப் பற்றி சில ஆழமான கருத்துகளைக் கூறும்போது, நான் மேலும் ஆச்சரியப்பட்டேன்; அதாவது, அவர்கள், "அடுத்த பாடலைக் கவனமாகக் கேளுங்கள். இது ஒரு சாதாரண அன்பைப் பற்றியது அல்ல... இது அதைவிட மிகவும் விலையுயர்ந்த ஒன்றைப் பற்றியது" என்று அறிமுகப்படுத்தினர்.
தாவீதும் கூட, வாழ்க்கையில் மிகவும் விலையுயர்ந்தது அன்பு என்பதையும், அவரது ஆழமான கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் அன்புதான் என்பதையும் தெரிந்து வைத்திருந்தார்! தாவீது இரவில் உறங்காமல் படுத்திருந்தபோது, ஆண்டவர் கண்டும் காணாதவராக இராமல், அவர் மேல் கண்ணோக்கமாயிருந்தார்.
ஆம், உன் தூக்கமின்மைக்காக நீ ஜெபிக்கும் ஜெபங்களுக்கும் நிச்சயம் பதில்கள் உண்டு!
உன்னால் ஏன் தூங்க முடியவில்லை என்று உனக்கு இன்னும் தெரியாவிட்டாலும், தாவீதைப்போல, உனக்கு ஆண்டவர் தேவை என்று அவரிடத்தில் சொல்லிக்கொண்டே இருந்தால், தூக்கம் மீண்டும் வரும் என்று நீ நம்பலாம். நீ அப்படிச் செய்யும்போது, சங்கீதத்தில் எழுதப்பட்டிருப்பதை நீ விரைவில் அனுபவிப்பாய்: "சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். (சங்கீதம் 4:8)
இதுவே உனக்கான என் ஜெபம்!
நீ ஒரு அதிசயம்!
Your Friend, Deborah
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறகும் எனக்கு அப்படித்தான் நடந்தது. இந்தத் தொடரில் எனது அனுபவங்களையும் எண்ணங்களையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/