தூக்கமின்மைமாதிரி
உன் இருதயத்தை நிரப்புவது எது?
நான் மறுபடியும் நிம்மதியின்றி படுக்கைக்குச் சென்றிருந்தேன், எண்ண அலைகள் என் மனதைச் சூழ்ந்துகொண்டன, உடனே தூங்குவதற்கு ஏதாவது எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தேன். நான் அப்படிச் செய்யக்கூடாதென்று முடிவெடுத்தேன்; பின் சற்று நேரத்தில் நானாகவே தூங்கிவிட்டேன்...
இருப்பினும், படுத்த சீக்கிரம் நான் திரும்பவும் எழும்பினேன். நான் அடுத்த சிந்தனையை சிந்திப்பதற்கு முன்பதாகவே, வேத வசனங்கள் என் மனதில் ஓட ஆரம்பித்தன! அதுமட்டுமல்ல, அற்புதமான யோசனைகளும், தெய்வீக ஞானமும் கூட எனக்கு வர ஆரம்பித்தன! ஆனால் இந்த எண்ணங்களை எழுதுவதற்கு முன்பே, நான் மீண்டும் தூங்கிவிட்டேன்.
இந்த சம்பவம் உண்மையிலேயே பல முறை மீண்டும் மீண்டும் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும், நான் எழுந்ததும் என் ஆத்துமா திருப்தி அடைந்தது, மற்றும் என்னால் உடனடியாக மீண்டும் தூங்க முடிந்தது. வழக்கமாக தூக்கத்தைப் பறிக்கும் கவலைகளுக்கு இப்போது இடம் இல்லாமல் போனது!
"...நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்"' (லூக்கா 6:45)” இரவு நேரத்தில் உன்னில் தோன்றும் எண்ணங்கள், உன் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன" என்பது உண்மை என்று நான் நினைக்கிறேன்.
"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்" (நீதிமொழிகள் 4:23) என்ற வசனம் உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். மற்ற மொழிபெயர்ப்புகள், "உன் எண்ணங்களைக் காத்துக்கொள்" அல்லது "உன் மனதைக் காத்துக்கொள்" என்று கூறுகின்றன. இது எவ்வளவு உண்மை என்பதை நான் அறிவதுபோல், நீயும் அறிவாய் என்று நான் நம்புகிறேன்! இந்த வேதவசனம், "உன் எண்ணங்கள் உன் தினசரி வாழ்க்கைமுறையைப் பாதிக்கிறது" என்று மட்டும் கூறவில்லை. அப்படி மட்டுமே கூறவில்லை, அவை உன் முழு வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அவை இரவும் பகலும் உன்னில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன!
அப்படியானால், நான் திருப்தியாகவும் நிறைவாகவும் இருப்பதற்கு காரணமாய் அமைந்த பெரிய மாற்றம் எது? இரவில் வேத வசனங்களாலும் அமைதியான எண்ணங்களாலும் என் இருதயம் ஏன் நிறைந்திருந்தது?
பகல் நேரங்களில் நான் ஆண்டவருடனும் அவருடைய வார்த்தைகளுடனும் அதிக அளவில் நேரம் செலவிட்டிருந்தேன், நிச்சயமாக 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலுக்கு உரைகளை எழுதியதாலும், என் கவலைகள் மற்றும் எதிர்மறையான பேச்சுகளுக்கு முன்பாக ஆண்டவரை முன் நிறுத்தும்படி உறுதியான தீர்மானங்களை எடுத்ததாலும்தான் என் மனம் வசனங்களால் நிரம்பியிருந்தது என்று நான் நம்புகிறேன். நான் சிறப்பாகவும், தூய்மையாகவும் வாழத் தேர்ந்தெடுத்தேன்.
ஆம், நமது பகல்நேரங்களில் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அது இரவு நேரங்களில் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன!
நீயும் இதைச் செய்ய விரும்புகிறாயா? எடுத்துக்காட்டாக, குறுகிய இடைவேளையின்போது, நேரடியாக சமூக ஊடகங்களுக்குச் செல்வதை விட, உன் வேதாகமத்தை அடிக்கடித் திறந்து வாசி. நீ சிறப்பாக வாழ விரும்புகிறாயா? அதாவது, அவருடைய சித்தத்தின்படி வாழ விரும்புகிறாயா?
நான் இப்போது புன்முறுவல் புரிகிறேன், ஏனென்றால் இது உன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்! :-)
நீ ஒரு அதிசயம்!
Your Friend, Deborah
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறகும் எனக்கு அப்படித்தான் நடந்தது. இந்தத் தொடரில் எனது அனுபவங்களையும் எண்ணங்களையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/