பலங்கொண்டு திடமனதாயிரு!மாதிரி

பலங்கொண்டு திடமனதாயிரு!

7 ல் 3 நாள்

கர்த்தர் உன்னிடம் கூறுகிறார், “திடமனதாயிரு!”

இன்று யோசுவா 1:9 ஆம் வசனத்தை நாம் தொடர்ந்து தியானிப்போம்...

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." (யோசுவா 1:9)

இன்று, கர்த்தர் உன்னிடம், “திடமனதாயிரு!” என்று கூறுகிறார்.

"பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்." (தானியேல் 10:19)

உன் இதயம் கலங்குகிறதா? திடமனதாயிரு... உன் ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

  • உனக்கு சமாதானத்தை தருபவர், அதை உனக்கு முழுமையாகத் தருகிறார்.
  • ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவருடைய பணியைச் செய்பவர்கள், அவரால் போஷிக்கப்படுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
  • அவர் அழைப்பவர்களை தகுதியுடையவர்களாக்குகிறார்.
  • அவர் ஒருவரே நீதி செய்பவர்.
  • சகலத்தையும் வழங்குபவர் அவரே.

திடமனதாயிரு என்று சொல்பவர் உன்னை அதைரியப்படுத்தும் எதையும் விட வலிமையானவர்.

வேதாகமம் சொல்கிறது, “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.” (ஏசாயா 43:1-2)

திடமனதாயிரு. உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உன்னைத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஆண்டவரோ, உன் பெயரைச் சொல்லி உன்னை அழைக்கிறார்...! நீ அவருடையவன் / அவருடையவள். அக்கினியின் சோதனையிலும் கூட அவர் உன்னோடு இருக்கிறார். அவர் உன் பக்கத்தில் இருக்கிறார். நீ ஒருபோதும் தனியாக இல்லை. உன் அருகாமையில் ஆண்டவர் இருக்கிறார். திடன் கொள்!

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

பலங்கொண்டு திடமனதாயிரு!

நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பயமுறுத்துவதுதான் பிசாசின் தந்திரம். அவன் கெர்ஜிக்கிற சிங்கத்தைப்போல உன்னைச் சுற்றித்திரிகிறான். ஆனால் திடமனதாயிரு என்று சொல்பவரோ, உன்னை அதைரியப்படுத்தும் எதையும் விட வலிமையானவர். உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே! வாழ்வின் உபத்திரவங்களுக்கு மத்தியில் உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வைத்துவிட்டு, நீ வலிமையாகவும் தைரியமாகவும் செயல்படும்படி, பலங்கொண்டு திடமனதாயிருப்பது எப்படி என்பதை நாம் இந்த தியானத்தின் வாயிலாகக் காண்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=beingstrongandcourageous