பலங்கொண்டு திடமனதாயிரு!மாதிரி

பலங்கொண்டு திடமனதாயிரு!

7 ல் 6 நாள்

ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்...!

நாம் கிட்டத்தட்ட நமது தியானத் தொடரின் நிறைவுப் பகுதிக்கு நேராக வந்திருக்கிறோம். இன்று, ஒரு மிக முக்கியமான திறவுகோலைப் பற்றி நாம் தியானிப்போம்: ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." (யோசுவா 1:9)

ஒருமுறை ஜான் நாக்ஸ் என்பவர் கூறினார்: "ஆண்டவருடன் இருக்கும் ஒரு மனிதன் எப்போதும் பெரும்பான்மையானவனாகவே இருப்பான்." வேறு வார்த்தைகளில் கூறினால், ஆண்டவர் உன்னோடு இருந்தால், நீ ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டாய் என்பதுதான் அதன் அர்த்தமாகும்!

மேலும் வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: "... தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" (ரோமர் 8:31)

யோசுவா தனியாக இருக்கவில்லை. அவர் எரிகோவைக் கைப்பற்ற வேண்டியிருந்தபோது, ​​​​ஆண்டவர் அவருக்கு ஒரு திட்டத்தைக் கொடுக்க தமது தூதரை அனுப்பினார். வெறும் திட்டம் மட்டுமல்ல: துதியின் வல்லமையினால்தான் மதில் இடிந்து விழுந்தது!

ஆண்டவருடைய தூதர்கள் உன்னைச் சுற்றி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஆண்டவருடைய கட்டளைப்படி... உனக்காக செயல்படுவர். இங்கே ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால்: நீ தனியாக இல்லை. ஆண்டவர் உன்னைத் தொடர்ந்து பாதுகாக்கிறார்.

இப்படித்தான், ஒரு தேவ தூதன் கிதியோனுக்குத் தோன்றினார்: “கர்த்தருடைய தூதன் அவனுக்குத் தோன்றி, “பராக்கிரமசாலியே, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” என்றான்." (நியாயாதிபதிகள் 6: 12)

கிதியோன் தன் தகப்பன் வீட்டில் மிகச்சிறியவர், அவரது கோத்திரத்தில் அவர்தான் மிகச் சிறியவராய் இருந்தார்; அவரது கோத்திரம்தான் இஸ்ரவேல் கோத்திரங்களிலேயே மிகவும் பலவீனமானது. ஆண்டவர் உண்மையிலேயே ஆச்சரியமான வழிகளில் செயல்படுகிறார், இல்லையா? ஆகையால் நீ இன்று மகிழ்ச்சியடையலாம்: நீ மிகவும் குறைவாக மதிக்கப்படுவதாக உணர்ந்தாலும் ஆண்டவர் உன்னை பராக்கிரமசாலி என்று அழைக்கிறார்! கிதியோனையும் யோசுவாவையும் அனுப்பியவரான, அதே ஆண்டவர்தான் உன்னையும் அனுப்புகிறார்.

உன்னை அனுப்பும் பராக்கிரமம் நிறைந்த ஆண்டவர் உனக்குள்ளே வல்லமையுள்ள யுத்தவீரராய் இருக்கிறார். அவர் யுத்தத்தில் உனக்காகப் போராடி எப்போதும் வெற்றி பெறுகிறார்!

பயப்படாமல் இன்றே முன்னேறு! கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்... உனக்கு எதிராக நிற்பவன் யார்?

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

பலங்கொண்டு திடமனதாயிரு!

நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பயமுறுத்துவதுதான் பிசாசின் தந்திரம். அவன் கெர்ஜிக்கிற சிங்கத்தைப்போல உன்னைச் சுற்றித்திரிகிறான். ஆனால் திடமனதாயிரு என்று சொல்பவரோ, உன்னை அதைரியப்படுத்தும் எதையும் விட வலிமையானவர். உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே! வாழ்வின் உபத்திரவங்களுக்கு மத்தியில் உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வைத்துவிட்டு, நீ வலிமையாகவும் தைரியமாகவும் செயல்படும்படி, பலங்கொண்டு திடமனதாயிருப்பது எப்படி என்பதை நாம் இந்த தியானத்தின் வாயிலாகக் காண்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=beingstrongandcourageous