தேவனோடு நெருங்கி வளர்தல்மாதிரி

தேவனோடு நெருங்கி வளர்தல்

3 ல் 3 நாள்

ஆண்டவருடைய ஆற்றலைப் பெற்றுக்கொள்!

"கர்த்தருடன் நெருங்கி ஜீவித்தல் மற்றும் அவரில் வளர்ச்சியடைதல்" என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானிக்கும் இத்தருணத்தில், வித்தியாசமான கோணத்தில் இதைத் தியானித்து, நான் ஜெபத்தை ஏறெடுக்க விரும்புகிறேன். ஆண்டவர் உன்னைப் பலப்படுத்தும்படியும், உன்னோடு இணைந்து நடக்கும்படியும், உன்னை வழிநடத்தும்படியும் நீ அவரிடம் கேள்.

ஏனென்றால், "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என ஆண்டவருடைய வார்த்தையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (யோவான் 15:5) எனவேதான் ஆண்டவரில் வளர வேண்டுமானால், ஜெபம் மிகவும் முக்கியமானது.

என்னுடன் சேர்ந்து ஜெபம் செய்ய உன்னை அழைக்கிறேன்...

“ஆண்டவரே, நீரே என் வாழ்வின் அனைத்திலும் ஆதாரமும் ஆற்றலுமாய் இருக்கிறீர்; எனக்கு திராட்சைச் செடியாய் இருப்பவரும் நீரே. நீர் இல்லாமல், நான் ஒன்றும் இல்லை; என்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது. உமது பரிசுத்த ஆவியானவரின் உதவியால் உம்மில் உறுதியாக இணைந்திருக்க எனக்கு உதவி புரிவீராக.

உமது நினைவுகள் என்னுடையதை விட மிக உயர்ந்தவை; சில சமயங்களில் "உம்மில் நிலைத்திருப்பதன்" அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரிவதில்லை. ஆனால் விசுவாசத்தினால், நான் என் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், என் முழு பலத்தோடும் தொடர்ந்து உம்மைத் தேட விரும்புகிறேன்.

நான் உமக்காக வாழ விரும்புகிறேன். எனது குடும்பம், எனது நண்பர்கள், எனது அயலகத்தார், எனது சக பணியாளர்கள் மற்றும் நான் தொடர்புகொள்ளும் அனைவரிடமும் கனிகொடுக்கிற நல்ல வாழ்க்கையை வாழ நீர் எனக்கு அருள்புரியும்.

சில சமயங்களில், என் சொந்த பலத்திலும், என் சொந்த வழியிலும் காரியங்களைச் செய்ய முயற்சிப்பதால் நான் சோர்வடைகிறேன். இயேசுவே, என்னை உம் அருகில் வைத்துக்கொள்ளும்! நீர் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். நான் சோர்வடைய விரும்பவில்லை... நான் இளைப்பாறும் இடத்தில் வாழ விரும்புகிறேன்; அதுவும் உமது ஜெயத்தில் இளைப்பாற விரும்புகிறேன். உமது மகிமைக்காக என் வாழ்நாள் முழுவதும் நான் ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருக்க விரும்புகிறேன். இன்று, என் பலத்தை உம்மிடத்திலிருந்து மட்டுமே பெறுவதை நான் தெரிந்துகொள்கிறேன்.

என் கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். ஆமென்!"

இன்றைய ஜெபம், “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'' என்ற வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது. (யோவான் 15:5)

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

தேவனோடு நெருங்கி வளர்தல்

நீ எப்போதாவது ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாக உணர்ந்திருக்கிறாயா? இன்று ஆண்டவருடன் நெருங்கி பழகும் நேரம். ஆண்டவரிடம் நெருங்கி வா, பதிலுக்கு அவர் உன்னிடம் நெருங்கி வருவேன் என்று உறுதியளிக்கிறார். ஆண்டவரோடு நெருங்கி வளர என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி நாம் விரிவாக இங்கே காணலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=intimacywithgod