சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த ராகேல் என்ற வரையாடு!மாதிரி

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த ராகேல் என்ற வரையாடு!

8 ல் 8 நாள்

அவரால் கூடாதது ஒன்றுமேயில்லை!

கானானியரின் ராஜாவாகிய யாபீன் இஸ்ரவேலை அடக்கி ஆண்டு கொண்டிருந்த வேளையில், அவனையும் அவனுடைய சேனயின் தலைவனான சிசெராவையும் அழிக்க, தேவனாகிய கர்த்தர், தெபோராள், பாராக், யாகேல் என்ற மூன்று வித்தியாசமான மனிதர்களை, தம்முடைய சித்தத்தை பூமியிலே நிறைவேற்ற உபயோகப்படுத்தினார் என்று பார்த்தோம்.

ஒரு நிமிடம் கவனியுங்கள்! இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது!

கர்த்தருக்கு தெபோராள், பாராக், யாகேல் என்றவர்களின் ஊழியம் தேவைப்பட்டது, அவர்களுடைய வரங்கள் அவர் சேவைக்குத் தேவைப்பட்டன! ஆனால் அவர்களை இயக்கியவர் தேவனே!

நாம் இன்று வாசிக்கிற வசனம், தேவன் யாபீனைத் தாழ்த்தினார் என்று அதைத் தெளிவு படுத்துகிறது! அவரால் கூடாதது ஒன்றுமேயில்லை!

இஸ்ரவேலின் சேனைகளின் வெற்றியோ, சிசெராவை வென்றதோ இந்த மூவர் சேர்ந்த அணியினால் நடக்க வில்லை. கர்த்தரின் அணியான இந்த மூன்று தேவனுடைய பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை கர்தருக்கு ஒப்புக்கொடுத்த போது, கர்த்தரால் இயக்கப்பட்டு இந்தக் காரியம் நடந்தது.

தலைமுறை தலைமுறையாக , ஏமீ கார் மைக்கேல், ஐடா ஸ்கட்டர் போன்ற கர்த்தருடைய பிள்ளைகள் தம்மை தேவனுடைய பணிக்கு அர்ப்பணித்ததால், கர்த்தருக்கு பிரியமான காரியங்களை நம்முடைய தேசத்திலும், இந்த பூமியிலும் கர்த்தரால் நிறைவேற்ற முடிந்தது. இந்த அருமையான ஊழியக்காரர்கள் கர்த்தருக்குத் தேவைப்பட்டனர்! ஆனால் அவர்கள் செய்த திருப்பணியை இயக்கியவர் கர்த்தரே!

இதுதான் தெபோராள், பாராக், யாகேல் இவர்கள் மூவரின் வெற்றிக்குப் பின்னணியாகும்!

இந்த மூவரில், யார் தலை, யார் வால், யார் முக்கியமான பங்கு வகித்தவர் , யாருக்கு அதிகமான வரங்கள் இருந்தது, என்றெல்லாம் கவலையில்லை! இவர்கள் மூவருமே அவருடைய சித்தத்தை செய்தவர்கள் , அவரால் இயக்கப்பட்டவர்கள் தான்!

ஆனால் யாபீனை வீழ்த்தியது கர்த்தரே! அவரால் மட்டுமே அதை செய்யக்கூடும்!

இன்று யார் நம்மை இயக்குபவர் என்று நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோமானால், நம்மூடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிம், திருச்சபை வாழ்க்கையிலும், நம்மால் அதிக காரியங்களை சாதிக்க முடியும்.

யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக தாழ்த்தியது தேவாதி தேவனே! சிசெராவை யாகேலின் கூடாரத்தில் அழித்ததும் தேவாதி தேவனே! இவை மனிதர்கள் செய்த வீர சாதனை போல தோன்றினாலும், அவர்களை இயக்கியது தேவனே! கர்த்தரால் எல்லாம் கூடும்! ஒரு தெபோராளையும், ஒரு பாராக்கையும், ஒரு யாகேலையும் கொண்டு பெரிய காரியங்களை செய்ய அவரால் கூடும்! அவரால் மட்டுமே கூடும்!

உன் உள்ளத்தை நேசிக்க யாருமில்லை என்று எண்ணுகிறாயா? உன்னை நேசிக்க அவரால் கூடும்!

உன் பாவ அகோரத்தை மன்னிக்க யாருமில்லை என்று எண்ணுகிறாயா? உன்னை மன்னிக்க அவரால் கூடும்!

உன் வாழ்வில் ஒளிந்திருக்கும் இருளைக் காண யாருமில்லை என்று எண்ணுகிறாயா? அதைக் காண அவரால் கூடும்!

நான் இருக்கும் பாதாளத்தில் என் சத்தத்தைக் கேட்பவர் யாருமில்லை என்று எண்ணூகிறாயா? உன் சத்தத்தைக் கேட்க அவரால் கூடும்!

யாரும் தொடக்கூடாத அசுத்தத்தால் நிறைந்திருக்கிறேனே என்று எண்ணுகிறாயா? உன்னைத் தொட அவரால் கூடும்!

தன்னுடைய கூடாரத்தில், தன்னுடைய வாழ்வில் நுழைந்த சிசெரா என்ற தந்திரவாதியை அழிக்க யாபேலுக்கு உதவி செய்த தேவாதி தேவனால் மட்டுமே இந்த வேளையில் உனக்கு உதவி செய்ய முடியும்!

அவரால் மட்டுமே கூடும்! அவரால் கூடாதது ஒன்றுமில்லை! அவருக்கு உன் வாழ்வை அர்ப்பணி!

வேதவசனங்கள்

நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த ராகேல் என்ற வரையாடு!

கானானியரின் ராஜா இஸ்ரவேலரை இருப்புக்கோலால் ஆண்ட பொழுது கர்த்தர் அவர்களை அழிக்க தமக்கென்று ஒரு சில மக்களை எழுப்பினார். அப்படியாக தேவனுடைய கரத்தில் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டவள்தான் யாகேல் என்ற கூடாரவாசி! தேவன்நம்மையும் அவருடைய பணியில் உபயோகப்படுத்த முடியும் என்பதற்கு அவள் ஒரு எடுத்துக்காட்டு! நட்பு என்னும் பெயரில் தன்னுடைய கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவை அவள் அழித்தவிதம் நாம் சாத்தானுக்கு எவ்வாறு எதிர்த்து நிற்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்! இந்த 8 நாட்கள் திட்டம் நம்மை, தெபோராவின் காலத்தில் வாழ்ந்த இந்த பாலஸ்தீனிய கூடாரவாசியின் வாசலில், சிசெரா என்ற சாத்தானின் தலை நசுக்கப்பட்ட சம்பவத்தைக் காண அழைத்துச் செல்லும்!

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com