சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்மாதிரி

எப்பொழுதும் சந்தோஷமாயிரு! 🎉
இன்று, சங்கீதம் 94:18-19 வரையிலான வசனங்களைக் குறித்த நமது தியானத்தின் கடைசி நாளாகும். இன்று ஆண்டவர் அளிக்கும் சந்தோஷம் உன் வாழ்வில் பெருக நீ அவருக்கு இடங்கொடுக்குமாறு உனக்கு அழைப்பு விடுக்கிறேன்!
"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது." (சங்கீதம் 94:18-19)
இந்த வசனம் “எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது." “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:16) என்று வேதாகமம் கூறினால், அது சாத்தியம் என்றுதான் அர்த்தம்!
ஆண்டவர் தம்முடைய சந்தோஷத்தின் மூலம் உன்னைப் பலப்படுத்த விரும்புகிறார். அவர் உன் இதயத்தில் அவரது பரிபூரண மகிழ்ச்சியையும் உன் உதடுகளில் அவரது புன்னகையையும் வைக்கிறார்.
ஆண்டவரைத் துதி, அவர் உன்னை தமது சந்தோஷத்தால் நிரப்பட்டும்! சந்தோஷம் ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதம்.
வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட உனக்கான எனது ஜெபம் இதோ:
- பரிசுத்த ஆவியின் பலத்தினாலே
- உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு,
- நம்பிக்கையின் தேவன்
- விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும்
- சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)
மறந்துவிடாதே: சந்தோஷம் எப்போதும் இயல்பாக வருவதில்லை. நம் இருதயத்தில் நாம் சந்தோஷமாய் இருக்கத் தீர்மானிக்கும்போது மட்டுமே இதை நாம் பெற முடியும். ஒரு உறுதியான முடிவை இப்போதே எடுக்க உன்னை அழைக்கிறேன்.
இன்று, பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே மகிழ்ச்சியாக இரு!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவ ு செய்யலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி

மிகுந்த கவலையின்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Psalm94_18_19