தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 12 நாள்

வெளிநாட்டில் அங்காடிக்கு செல்வதன் சிரமங்கள்

நெதர்லாந்தில் நான் ஒரு வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகிறேன். அங்கே பலர் ஆங்கிலம் பேசினாலும், அவர்களின் முதல் மொழி டச்சுதான். பல்பொருள் அங்காடிகளில் உள்ள லேபிள்கள் கூட டச்சு மொழியில்தான் இருக்கின்றன. அதனால், நான் ஒரு பொருளை வாங்க நினைத்து வேறு ஏதோ ஒன்றை வாங்கி வந்த சம்பவங்கள் பல முறை நிகழ்ந்துள்ளன.

ஒரு பொருள் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான மேல் உறையில் வெளியே அழகாகவும் சுவையாகவும் தோன்றலாம், ஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்பதே முக்கியம்.

மத்தேயு 25ல் (TAOVBSI) இயேசுவின் உவமையில் வரும் பத்து கன்னிகைகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் அனைவரும் திருமணத்திற்குத் தயாரானவர்கள் போல், அழகான உடைகள் அணிந்து, பளபளப்பான விளக்குகளுடன் மணமகனுக்காகக் காத்திருந்தது போல் தோன்றியிருக்கலாம். ஆனால் இறுதியில், அதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. தங்கள் விளக்குகளுக்குள் கூடுதல் எண்ணெய் வைத்திருந்த ஐந்து பேர் மட்டுமே விருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் செய்தி நமக்கும் மிகவும் பொருந்தும். நாம் என்ன அணிகிறோம், என்ன வைத்திருக்கிறோம், நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்று தோற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த உலகில், கடவுள் ஆழ்ந்த ஒன்றைப் பார்க்கிறார்.

"மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" - 1 சாமுவேல் 16:7 (TAOVBSI)

இயேசுவின் மிகவும் பிரபலமான போதனையான மலைப்பிரசங்கத்தில், இதை எதிரொலித்து, நாம் என்ன சாப்பிடுவோம் அல்லது என்ன அணிவோம் என்று கவலைப்படக்கூடாது என்பதை விளக்கினார் (மத்தேயு 6:25-34, TAOVBSI). அவர் முடிவில் இவ்வாறு கூறுகிறார்:

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்." - மத்தேயு 6:33-34 (TAOVBSI)

நாம் சேர்ந்து ஜெபிப்போம்:

பரலோக பிதாவே, என் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், என் இருதயத்தையும் பார்ப்பதற்காக உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக உம்மைத் தேட எனக்கு உதவி செய்யும், என் வாழ்க்கை உம்முடன் நெருக்கமாக இருப்பதால் செழிப்பாக இருக்கட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net