தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 26 நாள்

உங்களுக்கு மிகவும் பயமாக இருந்த ஆசிரியர் யார்? 👩🏻‍🏫

பள்ளியில் எனக்கு திருமதி ஃபெர்னாண்டஸ் என்ற மிகவும் கண்டிப்பான ஆங்கில ஆசிரியை ஒருவர் இருந்தார்.

அவருடைய கண்டிப்பான தோற்றமே மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மாணவரையும் பதற்றமடையச் செய்ய போதுமானதாக இருந்தது.

ஆங்கிலம் என்னுடைய முதல் மொழி என்ற போதிலும், நான் அவருக்கு மிகவும் பிடித்தமான மாணவர்களில் ஒருவன் என்ற போதிலும், அந்த ஆசிரியையின் மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதன் அழுத்தம் காரணமாக நான் என் வீட்டுப் பாடங்களை சரியாக செய்து முடிக்க தடுமாறுவேன். அவருக்கு ஏமாற்றம் அளித்துவிடுவோமோ என்ற பயமே என்னை அப்படி தடுமாறச் செய்துவிடும்.

ஆகவே, இயேசுவின் பத்து தாலந்துகள் உவமையில் (மத்தேயு 25:14-30 TAOVBSI) உள்ள மூன்றாவது ஊழியக்காரனுடன் நான் என்னை ஓரளவுக்கு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது, அவன் தன் எஜமானுக்குப் பயந்து, தனக்கு ஒப்புவிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல், அதைப் புதைத்து வைத்தான்.

முதல் கண்ணோட்டத்தில், அவனுடைய பயம் நியாயமானதாகத் தோன்றுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, எஜமான் வீட்டிற்கு வரும்போது, அந்த ஊழியக்காரன் கடிந்துகொள்ளப்படுகிறான்.

ஆயினும், நாம் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளன.

முதலாவதாக, அந்த ஊழியக்காரன் தோல்விக்கு பயந்தான், ஆனால் எஜமானுக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தது.

எஜமான் தன் ஊழியக்காரர்களை நம்பி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப கொடுத்தான் என்று சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (மத்தேயு 25:15 TAOVBSI).

அதாவது, எஜமான் அவர்களிடம் எதைக் கேட்கிறார் என்பதை அறிந்திருந்தார், அவர்கள் கையாளக்கூடிய அளவுக்கு மேல் எதையும் கேட்கவில்லை.

இரண்டாவதாக, அந்த ஊழியக்காரன் தன் எஜமானை “கடினமான மனிதன்” என்று அழைக்கிறான், ஆனால் அப்படி ஒரு பட்டத்தைப் பெறும் அளவிற்கு அவர் என்ன செய்தார்? உண்மையில், எஜமான் மிகவும் தாராளமான மற்றும் நம்பகமான முதலாளியாகத் தோன்றுகிறார். அவர் தன் செல்வத்தை வங்கியில் வைத்திருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக அதைத் தன் ஊழியக்காரர்களிடம் ஒப்படைக்கத் தேர்ந்தெடுத்தார்.

மூன்றாவது ஊழியக்காரன் தன் பகுத்தறிவற்ற பயங்கள், அவனுடைய முழு திறனையும் எட்டுவதைத் தடுக்க அனுமதிக்கிறான், தனக்குள்ளும் தன் எஜமானரைப் பற்றியும் உள்ள முடக்கும் சந்தேகங்களை நம்புவதற்கு தேர்ந்துகொள்கிறான்.

எதிரி எப்போதும் முயற்சி செய்வான்:

  • நீங்கள் திறமையானவர் அல்ல என்று உங்களை நம்பவைக்க.
  • கடவுளின் உண்மையைக் குறித்து கேள்வி கேட்க வைப்பதற்கு.

உண்மை என்னவென்றால், கடவுள் தாராளமான எஜமானரைப் போன்றவர். அவர் உங்களிடம் பெரிதானவைகளை ஒப்படைத்துள்ளார், மேலும் உங்களை உற்சாகப்படுத்துகிறார்!

இன்று ஒரு கணம், ஆண்டவர் மேலும் உங்கள் மேலும் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் பயங்களையும் இயேசுவிடம் ஒப்படைக்க ஒரு கணம் ஒதுக்குங்கள். அவர் தன் நன்மையை உங்களுக்கு வெளிப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net