1
நீதிமொழி 11:25
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்; மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்.
ஒப்பீடு
நீதிமொழி 11:25 ஆராயுங்கள்
2
நீதிமொழி 11:24
ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்; இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார்.
நீதிமொழி 11:24 ஆராயுங்கள்
3
நீதிமொழி 11:2
அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும்.
நீதிமொழி 11:2 ஆராயுங்கள்
4
நீதிமொழி 11:14
ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது, ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும்.
நீதிமொழி 11:14 ஆராயுங்கள்
5
நீதிமொழி 11:30
நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள்.
நீதிமொழி 11:30 ஆராயுங்கள்
6
நீதிமொழி 11:13
புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்; ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள்.
நீதிமொழி 11:13 ஆராயுங்கள்
7
நீதிமொழி 11:17
இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள்.
நீதிமொழி 11:17 ஆராயுங்கள்
8
நீதிமொழி 11:28
தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள்.
நீதிமொழி 11:28 ஆராயுங்கள்
9
நீதிமொழி 11:4
நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும்.
நீதிமொழி 11:4 ஆராயுங்கள்
10
நீதிமொழி 11:3
உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்; ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது.
நீதிமொழி 11:3 ஆராயுங்கள்
11
நீதிமொழி 11:22
புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது.
நீதிமொழி 11:22 ஆராயுங்கள்
12
நீதிமொழி 11:1
கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம்.
நீதிமொழி 11:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்