1
நீதிமொழி 29:25
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
மனிதருக்குப் பயப்படுவது கண்ணியாயிருக்கும்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
ஒப்பீடு
நீதிமொழி 29:25 ஆராயுங்கள்
2
நீதிமொழி 29:18
இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்; ஆனால் ஞானத்தின் சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நீதிமொழி 29:18 ஆராயுங்கள்
3
நீதிமொழி 29:11
மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை அடக்கிக் கொள்கிறார்கள்.
நீதிமொழி 29:11 ஆராயுங்கள்
4
நீதிமொழி 29:15
பிரம்பும் கண்டனமும் ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் தன் விருப்பப்படி வளரவிடப்படுகிற பிள்ளையோ, தன் தாய்க்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
நீதிமொழி 29:15 ஆராயுங்கள்
5
நீதிமொழி 29:17
உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்; அவர்கள் உன் மனதை சந்தோஷப்படுத்துவார்கள்.
நீதிமொழி 29:17 ஆராயுங்கள்
6
நீதிமொழி 29:23
ஒருவருடைய அகந்தை அவரை வீழ்த்தும், ஆனால் மனத்தாழ்மை கனத்தைக் கொண்டுவரும்.
நீதிமொழி 29:23 ஆராயுங்கள்
7
நீதிமொழி 29:22
கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள்.
நீதிமொழி 29:22 ஆராயுங்கள்
8
நீதிமொழி 29:20
பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம்.
நீதிமொழி 29:20 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்