வாக்கு பண்ணப்பட்டவர்மாதிரி
இருளுக்கு வெளியே
முழுமையான இருட்டிலே நீங்கள் எப்போதாவது இருந்ததுண்டா?
ஜனக்கூட்டம் மிகுந்ததும் வெளிச்சமே இல்லாத்துமான இடத்திலே நீங்கள் மாட்டிக்கொண்டதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும்! என்கிற அறிவிப்பை நீங்கள் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
ஏசாயா 9:2 கூறுகிறது,
"இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்;
மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது."
இயேசுவின் பிறப்பிற்கு 700 வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலே, வெளிச்சமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவருடைய வருகைக்காக செய்யப்பட்ட ஆயத்தங்களைக் குறித்து லூக்கா 1 கூறுகிறது. எலிசபெத்தால் தன்னுடைய வாலிப வயதிலே ஒரு குழந்தையைக்கூட பெற்றெடுக்க இயலவில்லை. சகரியா தனது இயலாத முதுமையில், தனக்கு ஒரு குழந்தையை கொடுக்கும்படி தேவனிடம் மன்றாடினான். தேவன் காபிரியேல் தூதனை அவனுடைய மன்றாட்டிற்கு பதில் சொல்லும்படி மட்டுமல்லாமல், ஒரு அற்புதத்தை அறிவிக்கவும் அனுப்பினார். தேவன் ஒரு பெரிய திட்டத்தோடு அவனுக்கு பதிலளித்தார். சகரியாவிற்கு பிறக்கப்போகும் குமாரன் அந்த வெளிச்சத்தின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்துவான்.
பூமிக்குரிய தந்தையால் அல்ல பரம தந்தையால் அக்குழந்தை பெயர் சூட்டப்பட்டது. யோவான் என்றால் தேவன் கிருபை நிறைந்தவர் என்று பொருள், அவனுடைய வாழ்க்கையின் மூலமாக, இயேசுவின் வழியாக வரும் தேவ கிருபை எவ்விடத்திலுமுள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
காபிரியேல் தூதனே வந்திருந்தும் நம்புவதற்கு சகரியாவிற்கு கடினமாயிருந்தது. அவன் தன்னுடைய முதிர் வயது மற்றும் சூழ்நிலைகளின் சவால்களை கண்டு அவைகளை தன்னால் மேற்கொள்ள முடியுமா என்று யோசித்தான். தேவனுடைய வல்லமையின் அடையாளமாக அந்த தூதனின் மூலமாக, சகரியா வின் வாய் கட்டப்பட்டது. தேவனுடைய வார்த்தை நிறைவேறி அவனுக்கு குழந்தை பிறக்கும்வரைக்கும், தேவனுடைய வல்லமையையும் தேவன் தனக்கு பண்ணின வாக்குத்தத்தத்தையும் குறித்து அவன் மவுனமாய் இருந்து தியானிக்கும்படி செய்தது.
காபிரியேலிடம் சகரியா கேட்ட கடைசி கேள்விகள் தன்னுடைய உடல் வரம்புகளைப் பற்றியதாய் இருந் தது. ஆனால் முடியாத காரியத்தையும் செய்ய தேவ னால் முடியும். இவ்வுலக சிரமங்களாலும் சூழ்நிலை களாலும் தேவன் கட்டுப்படுத்தப்படுவதில்லை, அவரது செய்தி எல்லா தடைகளையும் மேற்கொள்ளும். மக்கள் அனைவரும் இருளில் இருந்தபோதிலும், அந்த வெளிச்சம் வரவிருக்கிறது, அவர் நமக்கு இரட்சிப்பின் வழியைக் காட்டுவார்.
கடினமான அல்லது நம்பிக்கையற்ற சூழலிலிருந்து நீங்கள் தேவனிடம் ஜெபித்ததுண்டா? தேவன் செயல்படும் விதத்திற்கும், அவர் செய்யக்கூடிய செயல்களுக்கும் வரம்புகள் உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின் வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள் அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள் பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக லுமோ மற்றும் ஒன் ஹோபிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.lumoproject.com/